ETV Bharat / state

மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த ஜெர்மனி தனி கவனம்: அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் - பட்ஜெட்டில் இடம்பெறும் மகளிர் உரிமை தொகை திட்டம்

பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த ஜெர்மனியில் இருவகை வழிமுறைகள் பின்பற்றப்படுவதாக, தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பெண்களுக்கான உரிமைத் தொகை
பெண்களுக்கான உரிமைத் தொகை
author img

By

Published : Feb 28, 2023, 4:16 PM IST

Updated : Feb 28, 2023, 5:59 PM IST

பெண்களுக்கான உரிமைத்தொகை குறித்த அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெறுமா? நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பதில்

கோவை: அவிநாசி சாலையில் உள்ள ஜி.டி.நாயுடு மையத்தில் "எக்ஸ்பிரிமெண்டா" என்ற அறிவியல் மையம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த மையத்தை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் திறந்து வைத்தார். 40,000 சதுர அடியில் பல்வேறு அதிநவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த அறிவியல் மையத்தில், 120க்கும் மேற்பட்ட அறிவியல் பரிசோதனை கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ''எல்லா பகுதி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு வழிகாட்டும் வகையில் 'நான் முதல்வன்' திட்டத்தை முதலமைச்சர் துவக்கியுள்ளார். இத்திட்டம் முதலமைச்சரின் தனிப்பட்ட கவனம் மூலம் சிறப்பு முயற்சியாக தொடங்கப்பட்டது. கோவைக்கும், ஜெர்மனிக்கும் நல்ல உறவு உள்ளது.

இந்த கண்காட்சியில் உள்ள 120 அறிவியல் பரிசோதனை கருவிகள் பாதி ஜெர்மனியிலும், எஞ்சியவை கோவையிலும் தயாரிக்கப்பட்டவை. வரும் தலைமுறைக்கு விஞ்ஞான அறிவை ஊக்குவிக்கும் இந்த மையம், உலகளவில் முன்னுதாரணமான மையமாக உள்ளது. பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்த ஜெர்மனியில் இருவகையான வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

இந்த மையத்தினால் பல ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு திறன் மேம்பாடு முக்கியம். அரசு மூலம் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க வாய்ப்புகளை உருவாக்க உள்ளோம். இந்த மையத்தில் பயிற்சி பெற்றால், ஜெர்மனியில் எளிதாக வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது" எனக் கூறினார்.

பட்ஜெட்டில் மகளிருக்கான ரூ.1,000 உரிமைத் தொகை திட்டம் இடம்பெறுமா என்ற கேள்விக்கு, "முதலமைச்சர் சொல்வது நடக்கும். தனிப்பட்ட முறையில் நான் எதுவும் சொல்ல முடியாது" என்றார். தொடர்ந்து பேசிய அவர், "ஜிஎஸ்டி நிலுவைத்தொகை ஒரு ஆண்டுக்கு முழுமையாகவும், 3 மாதத்திற்கு கொஞ்சமும் இருக்கிறது. கடந்த ஜிஎஸ்டி கவுன்சிலில் 2020-21ஆம் நிதியாண்டிற்கான ஜிஎஸ்டி நிலுவைத்தொகை முழுமையாக விடுவிக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் கூறினார். ஆனால் ரூ.4,231 கோடி இன்னும் வர வேண்டியுள்ளது. இந்த மாதத்திற்குள் ரூ.4,000 கோடி வரும். அது தவிர்த்து ரூ.4,000 கோடி வரை இழப்பீட்டுத் தொகை வர வேண்டி உள்ளது. மாதந்தோறும் வரும் ஜிஎஸ்டி தொகையும் தாமதமாக வருகிறது.

நாங்கள் ஆட்சிக்கு வரும்போது வருவாய் பற்றாக்குறை ரூ.62,000 கோடியாக இருந்தது. நிதிப் பற்றாக்குறை ரூ.90,000 கோடியாக இருந்தது. முதல் ஆண்டில் வருவாய் பற்றாக்குறையை ரூ.46,000 கோடியாக குறைத்தோம். நிதிப் பற்றாக்குறையை 70 சதவீதம் குறைத்துள்ளோம்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: "ஏற்றமிகு ஏழு திட்டங்கள்" கீழ் புதிய திட்டங்களை தொடங்கி வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்!

Last Updated : Feb 28, 2023, 5:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.