ETV Bharat / state

வடமாநில தொழிலாளர்கள் வீட்டை சேதப்படுத்திய காட்டு யானை கூட்டம்!

கோயம்புத்தூர்: சின்கோனா பகுதியில் சுற்றித் திரிந்த காட்டு யானைக் கூட்டம் வடமாநிலத் தொழிலாளர்கள் வீட்டைச் சேதப்படுத்தியது.

elephant attack house  காட்டு யானைக் கூட்டம்  வடமாநில தொழிலாளர்கள்  வால்பாறையில் காட்டு யானைக் கூட்டம் வீடு சேதம்  Wild elephant herd house damage in Valparai  North Indian Labour  Wild elephant herd as North indian workers house damage in valparai
Wild elephant herd house damage in Valparai
author img

By

Published : Feb 22, 2021, 12:15 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், வால்பாறை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வனப்பகுதியில் யானை, சிறுத்தை, கரடி, செந்நாய் கூட்டம், கருஞ்சிறுத்தை, காட்டு மாடு என பல்வேறுபட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக கேரள வனப்பகுதியிலிருந்து வெளியேறிய 800க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் வால்பாறை, சிறுகுன்றா, சின்கோனா, கவர்க்கல், வாட்டர் பால் உள்ளிட்ட எஸ்டேட் பகுதிகளில் கூட்டமாகச் சுற்றி வருகிறது.

யானை கூட்டங்கள் இரவு நேரங்களில் நியாய விலை கடைக்குள் புகுந்து பொதுமக்களுக்கு விநியோகிக்க வைக்கப்பட்டிருந்த அரிசி உள்ளிட்ட பொருள்களை சேதப்படுத்தி வருகிறது.

வீட்டை சேதப்படுத்தும் காட்டு யானைக் கூட்டம்

இந்நிலையில், நேற்று (பிப்.21) சின்கோனா, பத்தாம்பத்தி ஆகிய வட மாநில தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கும் பகுதிகளில் உள்ளே புகுந்த காட்டு யானை கூட்டம், இன்று அதிகாலை வடமாநில தொழிலாளர்கள் வீட்டைச் சேதப்படுத்தியது.

இதுகுறித்து தகவலறிந்து அங்கு வந்த வனத்துறையினர், வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டு காட்டு யானை கூட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: அதிகரிக்கும் யானை-மனித மோதல்கள்! காரணம் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.