ETV Bharat / state

'உலகத்தைத் தனதாக்கும் குறுகிய மனப்பான்மையை மனிதன் கைவிட வேண்டும்' - latest tamil news

"உலகத்தை, மனிதர்களுடையதாக மட்டும் எண்ணி பார்ப்பதே, சூழலியல் பிரச்னைக்கு காரணம். உலகம் அனைத்து உயிர்களுக்கானது என்ற புரிதல் வந்தால் போதும், இயற்கையை மீட்டெடுத்து விடலாம்"

தனக்கு மட்டும்... என்ற குறுகிய மனப்பான்மையை மனிதர்கள் மாத்திக்கணும்

author img

By

Published : May 5, 2020, 9:55 AM IST

எல்லைகளின் வரையறைகளைத் தெரிந்து கொள்ளாத வனவிலங்குகள், கானகத்திலிருந்து நகரத்திற்குள் நுழைவதால், பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தன. ஆனால் தற்போது அமல்படுத்தப்பட்டிருக்கும் ஊரடங்கு, விலங்குகளுக்கு சுதந்திர காலமாக அமைந்திருக்கிறது. மனிதனின் ஆக்கிரமிப்பு இல்லாத, சாலை அவற்றிற்கு கொண்டாட்டத்தை அளிக்கிறது. மனிதர்களை முடக்கிய ஊரடங்கு, இயற்கையை மீட்டெடுத்துள்ளது.

இதுகுறித்து ஓசை சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் காளிதாஸ், "கோவிட் 19 என்ற தீ நுண்மி, மனிதர்களை வீடுகளுக்குள் முடக்கியுள்ளது. இந்தத் துயர் மிகுந்த நாள்களில், சில மகிழ்ச்சியான செய்திகளும் வந்துகொண்டிருக்கின்றன. காடுகளை ஒட்டியுள்ள பகுதிகளில், வனவிலங்குகள் சுதந்திரமாக நடமாடுகின்றன. நகர்ப்புறங்களுக்கும் கிராமப்புறங்களுக்கும் வனவிலங்குகள் பதற்றமின்றி வந்துபோகின்றன.

வனவிலங்குகள்
வனவிலங்குகள்

ஒரு காலத்தில் பூமியின் பெரும்பகுதி காடுகளாகவும், வன உயிர்களின் வாழ்விடமாகவும் இருந்தது. கடந்த ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, வளர்ச்சி என்ற பெயரில் அதன் வாழ்விடங்களை, மனிதர்களாகிய நாம் ஆக்கிரமித்துள்ளோம். இதனால் வனவிலங்குகளின் வாழ்விடம் சுருங்கியுள்ளது. அவ்வாறு சுருங்கிய வாழ்விடத்திலும், சாலைகள் அமைத்து இரவு பகலாக வாகனப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தியிருக்கும்" என வளர்ச்சியினால் ஏற்பட்ட வீழ்ச்சியைச் சுட்டிக்காட்டினார்.

முயல்
முயல்

போக்குவரத்து மனிதர்களுக்குத்தான் வளர்ச்சி, வன உயிரினங்களுக்கு இடையூறு என விவரிக்கும் காளிதாஸ், அவற்றின் விளைவுகளையும் எடுத்துரைக்கிறார். அவர் கூறுகையில், "போக்குவரத்தினால் பல இடங்களில் பகலில் நடமாடக் கூடிய விலங்குகள், இரவில் மட்டுமே நடமாடக் கூடிய விலங்குகளாக மாறியுள்ளன. முதுமலையிலிருந்து பந்திப்பூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், அந்தக் காட்டு விலங்குகள் சுதந்திரமாக நடமாடுவதற்கு, இரவு நேர போக்குவரத்திற்கு தடைவிதிக்கப்பட்டது. ஆனால், அவற்றை இன்று பலர் எதிர்த்து வருகின்றனர்.

தோகையை விரித்தாடும் மயில்
தோகையை விரித்தாடும் மயில்

”இந்த உலகத்தை மனிதர்களுடைய உலகமாக மட்டும் எண்ணி பார்ப்பதே, சூழலியல் பிரச்னைக்கு காரணம்”

எல்லா உயிரினங்களுக்கும் வாழும் உரிமை உள்ளது. இந்த மனநிலை மிகவும் அவசியமானது. கரோனா காலம் முடிந்த பிறகு நம்முடைய செயல்பாடுகள், வனவிலங்குகளை இடையூறு செய்யும். ஒரு உண்மையைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் இல்லாத உலகத்தில், பறவைகளும் விலங்குகளும் உயிர் வாழும்.

சாலையோரத்தில் மேய்ச்சலிலிருக்கும் மான்கள்

ஆனால், அவை இல்லாத உலகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது. வன உயிரினங்கள் வாழ்வது, அவற்றின் அடிப்படை உரிமை. அவற்றின் வாழ்விடத்தில், நாம் ஆக்கிரமிப்பு செய்யக்கூடாது. பல இடங்களில் யானைகளின் வலசை பாதை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. இதன் விளைவாக, விலங்கு-மனித மோதல் தொடர்ந்து ஏற்படுகிறது" என்றார்.

ஊரடங்கு காலத்தில் வனவிலங்குகளின் சுதந்திரம்!

இனி செய்ய வேண்டியது?

"இப்போது, வீடுகளில் முடங்கியிருப்பது போலவே, வனவிலங்குகளுக்கு தொந்தரவு செய்யாத மனிதனாக மேம்பட வேண்டும். மனிதர்கள் மட்டுமே, நடமாட வேண்டும் என்ற குறுகிய மனப்பான்மையை மாற்ற வேண்டும். வனவிலங்குகளுடன் இணைந்து வாழ்வதற்கான மனநிலையோடு வாழ வேண்டும். நமக்கு அடுத்துவரும், தலைமுறைக்கு அதுவே, நன்மை பயக்கும்" என்றார்.

இதையும் படிங்க: சுட்டெரிக்கும் வெயில்... தவிக்கும் சங்குவளை நாரைகள்: பாலைவனமான பறவைகள் உய்விடம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.