ETV Bharat / state

கோவையில் கிடப்பில் போடப்பட்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள்: பொதுமக்கள் அதிருப்தி

author img

By

Published : Jan 3, 2022, 4:38 PM IST

உப்பாற்றிலும் ஆழியாற்றிலும் தொடர்ந்து கழிவுநீர் கலந்து வருகிறது. அங்கு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

ஆற்றில் கழிவுநீர் கலக்கும் சூழல்
ஆற்றில் கழிவுநீர் கலக்கும் சூழல்

கோயம்புத்தூர் மாவட்டம் ஆனைமலை, வேட்டைக்காரன்புதூர் மற்றும் ஒடையகுளம் ஆகிய 3 பேரூராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் உப்பாற்றிலும் ஆழியாற்றிலும் கலந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நீண்ட காலமாக இருந்துவரும் இப்பிரச்சினைக்கு தீர்வு காணவேண்டும், ஆறுகள் மாசுபடுவதை தடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இப்பிரச்சினைக்கு தீர்வு காண 5 இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கப்படும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. ஆனால் தற்போதுவரை இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆனைமலை தாலுக்கா செயலாளர் பரமசிவம், "உப்பாறு, ஆழியாறு அருகே மயானங்கள் உள்ளன. அங்கு புதைக்கப்படும் உடல்கள் மழைக்காலங்களில் ஆறுகளில் கலக்கின்றன. அதே ஆறுகளில் இருந்து மூன்று பேரூராட்சிகளுக்கு குடிநீரும் எடுக்கப்படுகிறது.

ஆற்றில் கழிவுநீர் கலக்கும் சூழல்

இப்பிரச்சினைக்கு தீர்வு காண 5 இடங்களில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலைங்கள் அமைக்க அலுவலர்கள் முடிவெடுத்தனர். ஆனால் குடிநீர் வடிகால் வாரியத்தினர் இதில் போதிய ஆர்வம் காட்டாததால் இத்திட்டம் கடந்த 2 ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: சாட்டை துரைமுருகன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.