கோயம்புத்தூர்: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கிராம கண்காணிப்பு காவல் அலுவலர் நியமன விழா மற்றும் கிராமப்புறங்களில் கிராம விழிப்புணர்வு காவல் அலுவலர் பெயர் பலகை திறப்பு விழா ஆர்.பொண்ணாபுரத்தில் நடந்தது. இதில் கோவை மண்டல ஐஜி பெரியய்யா கலந்து கொண்டு பெயர் பலகையைத் திறந்து வைத்தார்.
பின்னர் பொதுமக்களிடமும் காவல்துறையினரிடம் பேசிய ஐஜி, கிராமப்புறங்களில் நடக்கும் பிரச்னைகளை தெரிவிக்கும் விதமாக காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் நலன் கருதி வாட்ஸ் அப் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. நியமிக்கப்பட்டுள்ள காவலர்கள் பொதுமக்களிடம் ஒருதலைபட்சமாக நடந்து கொள்ளக்கூடாது.
பொள்ளாச்சி சரகத்திற்கு உட்பட்ட ஏழு காவல் நிலையங்களில் இருந்து உதவி ஆய்வாளர் காவலர்கள், காவலர்கள் 223 நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்களுக்கு கிடைக்கும் தகவல்களை விரைவாக மேலதிகாரிகளுக்கு தெரிவித்து உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள். சுதந்திரம் வாங்குவதற்கு முன்பு ஆங்கிலேயர்களுக்கு அடிபணிந்து அன்றைய காவலர்கள் சேவை செய்து வந்தனர். 1947 சுதந்திரத்திற்கு பின்பு காவலர்கள் மக்களுக்காக பணி செய்து வருகின்றனர்.
ஸ்காட்லாந்து காவலர்களுக்கு பிறகு தமிழ்நாடு காவலர்க தான் இன்று வரை குற்ற கண்டுபிடிப்புகளில் விரைவாக செயல்பட்டு முன்னுதாரணமாக உள்ளனர்.
ஆர் பொன்னாபுரம் புரம் பகுதியில் விழாவில் கலந்து கொண்ட குழந்தைகளுக்கு ஐஜி சிறப்பு பரிசுகளை வழங்கினார். இந்த விழாவில் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் ரா.அருளரசு, துணை கண்காணிப்பாளர் கே.ஜி. சிவக்குமார், ஆய்வாளர்கள் பிரபுதாஸ், வைரம், வெற்றி வேலவன், விஜயன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் ,பொதுமக்களும் கலந்து கொண்டனர்
இதையும் படிங்க: கோவையில் பல வழக்குகளில் தேடப்பட்ட நபர் கைது