ETV Bharat / state

அதிக சீட் கேட்க மாட்டோம், குறைவான சீட்டை ஏற்கவும் மாட்டோம்: கே.எஸ்.அழகிரி - K.S.alagiri

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக சீட் கேட்க மாட்டோம். அதேபோல் குறைவான சீட் கொடுத்தால் ஏற்கவும் மாட்டோம் என மாநில காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

We wont ask for more seats and will not accept less seats: K.S.alagiri

author img

By

Published : Nov 23, 2020, 6:40 AM IST

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், தேசிய செயலாளர் சஞ்சய்சத், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சசிகாந்த் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்த விவசாயிகள் பாதுகாப்பு மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தமிழ்நாட்டை பிகார் தேர்தல் முடிவுகளோடு ஒப்பிடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல் எனவும், மத்திய பாஜகவின் அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அதிமுக ஆட்சியின் அராஜக ஊழல் ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில் 2021 சட்டப்பேரவை தேர்தல் நிச்சயம் அமையும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வேளாண்மை திருத்த சட்டங்களை திரும்ப பெறக்கோரி நவ.28ஆம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் ஏர்க்கலப்பை பேரணி நடத்தப்படும், ஊழலில் ஊறித் திளைக்கும் அதிமுக ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கண் துஞ்சாமல், அயராது தீவிரமாக பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இம்மாநாட்டில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, இரவும், பகலும் திரும்ப திரும்ப வருவது போல வெற்றி, தோல்வி வரும். அதுதான் ஜனநாயகத்தின் அழகு. சர்வதிகாரிகாரிகள் கவர்ச்சிகரமாக தான் இருப்பார்கள். கவர்ச்சிகரமாக தான் பேசுவார்கள். ஹிட்லர், முசோலினி போல மோடி செய்து வருகிறார்.

காங்கிரஸ் கட்சி நாத்திக கட்சி போலவும், இந்து மதத்திற்கு எதிரானது போலவும், காங்கிரஸ் கட்சியினர் இந்துக்கள் அல்லாதவர்கள் போலவும், பாஜக மட்டும் இந்துகளுக்காக வாழ்வது போலவும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஊடகங்கள் சித்தரித்து வருகின்றன.

ஆன்மிகம் என்பது வேறு, மதம் என்பது வேறு. நாட்டில் பகையுணர்ச்சியை தூண்ட, வேலை பாஜகவினர் கையில் எடுத்துள்ளனர். இது முருகனுக்கு செய்யும் துரோகம். முருகன் கையில் இருக்க வேண்டிய வேல் மற்றவர்கள் கைகளுக்கு போனால் தவறு வரும். மதச்சார்ப்பின்மை என்ற கொள்கை காரணமாக தங்கள் கூட்டணி உயிரோடு உள்ளது. நல்ல முறையில் சென்று கொண்டுள்ள இந்த கூட்டணி வெற்றி கூட்டணி. வருகின்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அதிகமான சீட் கேட்க மாட்டோம். குறைவானதை ஏற்க மாட்டோம். தேவையானவற்றை பெறுவோம்'' என்றார்.

இதையும் படிங்க: வேல்யாத்திரை முடியும் போது திமுகவுக்கு எதிரான சூரசம்ஹாரம் தொடங்கும்'- பொன். ராதாகிருஷ்ணன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.