ETV Bharat / state

'பக்தியை வைத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை' - அமைச்சர் சேகர்பாபு - அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

கோவை மருதமலை கோயிலில் மல்டி லெவல் கார் பார்க்கிங் அமைய உள்ளதாக, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு

author img

By

Published : May 23, 2022, 10:24 PM IST

கோயம்புத்தூர்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, கோவை பேரூர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் பேட்டரி கார் சேவையைத் தொடங்கி வைத்தார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'இந்து சமய அறநிலையத்துறை தனது பயணத்தை மனநிறைவோடு ஒரு ஆண்டினை நிறைவு செய்து மாற்றுக் கருத்துள்ளவர்களும் மகிழ்ந்து வரவேற்கின்ற அளவில் செயல்பட்டு வருகிறது. சட்டமன்றத்தில் அறிவிப்பு எண் 35-ல் அறிவிக்கப்பட்டது போல் ஏற்கெனவே இருக்கின்ற பழுதடைந்த 21 மின்கல ஊர்திகளை பழுது நீக்க வேண்டும். அதுபோக 13 திருக்கோயில்களில் மின்கல ஊர்திகளை ஏற்படுத்த முதலமைச்சர் அறிவித்திருந்தார்.

அதில் முதலாவதாக, பேரூரில் மின்கல ஊர்தி சேவை தொடங்கி வைக்கப்பட்டதோடு, அறிப்பு எண் 48-ல் ஐந்து திருக்கோயில்களில் மலைப்பாதை அமைக்க ஒரு கோடி ஒதுக்கீடு செய்து அடிப்படை கட்டமைப்புகளை ஆய்வு செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டிருந்தார். அதில் கண்ணகி திருக்கோயில், போளூர் நரசிம்மன் திருக்கோயில், திருவண்ணாமலை பருவதமலை கோயில், சதுரகிரி அய்யன் திருக்கோயில், வெள்ளியங்கிரி திருக்கோயில் ஆகிய கோயில்களில் நானும் துறை ரீதியான அலுவலர்களும் ஆய்வுசெய்தோம்.

வெள்ளியங்கிரி பாதைகளை சீரமைக்க முதலமைச்சரிடம் கலந்துபேசி, அதனை விரைவில் சரி செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்படும். கரிகாலச்சோழனால் கட்டப்பட்ட பேரூர் கோயில் கடந்த 2010ஆம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது. தற்போது பேரூர் கோயிலுக்கு ஆறுகோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து திருப்பணிகள் மேற்கொள்ள உத்தரவு போடப்பட்டுள்ளது. விரைவில் குடமுழுக்கு நடைபெறும்.

ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவருக்கும் ஒரு சேர்ந்த ஆட்சி திமுக ஆட்சி: கோவை மாவட்டத்தில் 23 கோயில்கள் ரூ.63 கோடி செலவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடமுழக்கிற்குத் தாயராக உள்ளது. ஆத்திகர்கள், நாத்திகர்கள் அனைவருக்கும் ஒரு சேர்ந்த ஆட்சி. இந்த ஆட்சிக்குப் பேருதான் திராவிட மாடல் ஆட்சி, இறையன்பர்கள், பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை சரிசெய்து தர முதலமைச்சர் உத்தரவிட்டதன் பேரில் ஒவ்வொரு கோயிலாக ஆய்வு செய்து வருகிறேன்.

மருதமலை கோயிலில் லிஃப்ட் அமைக்க ஆறு கோடி அளவிற்கு கூடுதலாக நிதி தேவைப்படுகிறது. 45 முதல் 50 நாட்களில் லிஃப்ட் அமைக்கும் பணிகள் தொடங்கும். வெள்ளியங்கிரி மலை ஏற்றம் புதிய அனுபவம், அதிக காற்று, அதிக குளிர் ஆகியவற்றைத் தந்தது. செங்குத்தான மலைப்பாதையில் பக்தர்கள் ஏறுவதற்கு சில இடங்களில் கடிமான சூழ்நிலை உள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டி

தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத அனுவாவி முருகன் கோயிலுக்கும், பழனி இடம்பன் மலை கோயிலுக்கும் ரோப்கார் அமைப்படும் என முதலமைச்சர் அறிவித்திருக்கிறார். அதற்கான சாத்தியக்கூறுகள் ஆராய்ந்து ஆய்வு அறிக்கை பெறப்பட்டுள்ளது. பெரிய கோயில்களில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் பாலூட்டும் அறைகள் அமைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

ஒரு சில திருக்கோயில்களில் உட்புறமாக, கழிப்பறைகள் வைத்துகொள்ள சில சங்கடங்கள் இருக்கிறது. 48 கோயில்களில் ஒரு ஆண்டுக்குள் குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் துறையின் மூலம் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது’ என்றார்.

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை ஆதீனத்திற்கு பல்லக்கு தூக்குவது தொடர்பான கேள்விக்கு, ”பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கின்ற ஆட்சியாக இந்த ஆட்சி இருக்கிறது. பக்தியை வைத்து அரசியல் செய்வதை நாங்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்வது இல்லை.

அழையாத வீட்டில் நுழையாத விருந்தாளியாக போகின்றவர்களைப் பற்றி பதில் கூற விரும்பவில்லை. ஆண்டவன் அழைத்தால் தான் யாரும் வரமுடியும். அழைக்காமல் வருவது சிறப்பல்ல”, எனவும் தெரிவித்தார்.

கோயில்களில் தாய்மார்கள் பாழூட்டும் அறை, முதலில் பெரிய கோயில்களில் குறிப்பாக அதிக மக்கள் வரும் கோயிலில் பாலூட்டும் அறை அமைக்கப்படும் எனவும் தமிழ்நாடு முதலமைச்சரின் ஆட்சிதான் திருக்கோயில் வரலாற்றில் பொற்கால ஆட்சி எனவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: நித்யானந்தா இட்லி சாப்பிட்டாரா?… ஃபேஸ்புக்கில் கொடுத்த பகீர் விளக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.