கோவை மாவட்டம், பொள்ளாச்சி, சுற்றுவட்டாரத்தில் மழைக்காலங்களில் பெய்யும் மழைநீர் கோரையாறு வழியாக கேரளாவுக்கு சென்று வீணாகக் கடலில் கலந்துவந்தது. இந்நிலையில், கோரையாறு குறுக்கே தடுப்பணை கட்ட ராமபட்டினம், தாவளம், பட்டியகவுண்டனூர் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, பொள்ளாச்சி சட்டப்பேரவை உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் நிதியிலிருந்து இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி தடுப்பணை கட்டப்பட்டது.
இதன் பயனாக பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியில் பெய்த மழைநீர் அந்த கோரையாறு தடுப்பணையில் வந்ததில் ஒரு டிஎம்சி தண்ணீர் சேமிக்கப்பட்டுள்ளது. இதனால் தடுப்பணையைச் சுற்றி உள்ள 200 ஏக்கர் பரப்பில் உள்ள விவசாயிகள் பயன் பெற்று வருவதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.