பொள்ளாச்சி: ஆத்து பொள்ளாச்சியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன், தந்தை உயிரிழந்த நிலையில் தாய் வளர்ப்பில் வளர்ந்து வருகிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறமுடியாத இவர் மீண்டும் இரண்டாம் முறை தேர்வு எழுதி வெற்றி பெற்றார்.
இந்நிலையில் ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றதையடுத்து பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், தன்னார்வலர்கள் அவருக்கு உதவி செய்து வருகின்றனர்.
அந்தவகையில் மருத்துவர் கோபி கிருஷ்ணன் தனது சொந்த செலவில் 10,000 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள், வாட்ச் உள்ளிட்டவை வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ளார். நகராட்சி ஆணையர் தானுமூர்த்தி, பொறியாளர் கிரிஸ் சன் ஆகியோர் முன்னிலையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
இதையும் படிங்க: நீட் தேர்வு - பெற்றோர் அழுத்தம் தருவதாக மாணவர்கள் வேதனை