விவேகானந்தரின் 150ஆவது ஜெயந்தி விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டுவருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையில் அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் அமைப்பினர் பேரணி நடத்தினர்.
பேரணியை பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் கனகசபாபதி தொடங்கிவைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர், விவேகானந்தரின் தேசிய மாண்பு, தெய்வீக பண்புகள் போன்றவைகள் குறித்து எடுத்துரைத்தார்.
இந்தப் பேரணியானது கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியிலிருந்து வ.உ.சி மைதானம் வரை நடைப்பெற்றது.
இதில் கல்லூரி மாணவ, மாணவிகள், கல்வியாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரணியில் கலந்துகொண்டவர்கள் சுவாமி விவேகானந்தரின் படங்களை கையில் ஏந்தியவாறு சென்றனர்.
இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி - 8,000 பேர் மீது வழக்குப்பதிவு!