கோவை: இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்ததையடுத்து கவுண்டம்பாளையம் ஜி என் மில்ஸ் பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிகள் கடந்த சில வருடங்களுக்கு முன்பு துவங்கப்பட்டது. இதில் கவுண்டம்பாளையத்தில் நடைபெற்று வந்த உயர்மட்ட மேம்பால பணிகள் நிறைவடைந்துள்ளது.
ஆனால் ஜி என் மில்ஸ் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருவதால் அந்த பகுதிகளில் காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது காலை நேரத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பள்ளி கல்லூரி மாணவர்களும் பணிக்கு செல்வர்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.
அதுபோல் மாலை நேரங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பணி முடிந்து வீட்டுக்கு செல்பவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனையடுத்து மேம்பால பணிகள் விரைந்து முடிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று(ஜூன்08) மாலை மேட்டுப்பாளையம் செல்வதற்காக மேற்கு மண்டல காவல்துறை துணை தலைவர் முத்துசாமி தனது காரில் மேட்டுப்பாளையம் சாலையில் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது ஜி என் மில்ஸ் பகுதிக்கு வந்தபோது கடுமையான போக்குவரத்து நெரிசலில் அவரது கார் சிக்கியது மேலும் அங்கு போக்குவரத்தை ஒழுங்கு படுத்த காவலர்கள் இல்லாததால் இந்த நெரிசல் ஏற்பட்டதை உணர்ந்த அவர் திடீரென காரிலிருந்து இறங்கி போக்குவரத்தை ஒழுங்கு படுத்தும் பணியில் ஈடுபட்டார்.இதனையடுத்து அந்த பகுதிக்கு போக்குவரத்து காவலர்கள் வரவழைக்கப்பட்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தினர். காவல்துறை துணைத் தலைவர் சாலையில் இறங்கி போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க:அதிரடியாக இறங்கி போக்குவரத்தை சீர் செய்த இளைஞர்கள்!