ETV Bharat / state

'ஸ்டாலின் கனவு பலிக்காது... மீண்டும் அதிமுகதான்' - பொள்ளாச்சி ஜெயராமன் - குடியுரிமை திருத்தச் சட்டம்

கோயம்புத்தூர்: குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் குழப்பத்தை ஏற்படுத்தி, ஆட்சிக்கு வரவேண்டும் என்கிற ஸ்டாலினின் கனவு பலிக்காது என மீண்டும் சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்ட வி.ஜெயராமன்

author img

By

Published : Feb 29, 2020, 9:52 AM IST

கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த ராசிசெட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட சேர்வைக்காரன்பாளையத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று வருவாய்த் துறை சார்பில் சிறப்பு மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் சிறப்பு விருந்தினராக சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி வி. ஜெயராமன் பங்கேற்று 259 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், ”குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இஸ்லாமிய மக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. பாதிப்பு இருப்பதாக கூறும் திமுக, என்ன பாதிப்பு இருக்கிறது என்பதற்கு விளக்கமளிக்க வேண்டும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் தெரிவித்தார். ஆனால், அதற்கு திமுக வெளிநடப்பு செய்தது.

மனுநீதிநாள் முகாமில் கலந்துகொண்ட வி.ஜெயராமன்

இஸ்லாமியர்கள் மீதும், மக்கள் மீதும் எந்த அக்கறையும் அவர்களுக்குக் கிடையாது. பிரசாந்த் கிஷோருக்கு கணக்கில் வராத ரூ.500 கோடி கொடுத்து பொய் பரப்புரைகளைச் செய்து ஓட்டுக்காக ஸ்டாலின் தூண்டிவிடுகிறார். ஆனால், ஸ்டாலின் ஆட்சிக்கு வரவேண்டும் என்ற கனவு என்றுமே பலிக்காது. மீண்டும் அதிமுகவே தான் ஆட்சிக்கு வரும்” என்றார்.

இதையும் படிங்க: ஸ்டாலினை கிண்டலடித்த அமைச்சர் ஜெயக்குமார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.