ETV Bharat / state

அண்ணாமலை ஒரு அரசியல் நகைச்சுவை மன்னர்: விளாசிய விசிக தலைவர் திருமாவளவன்!

author img

By

Published : Apr 20, 2023, 12:03 PM IST

அண்னாமலை தேர்தல் சமயத்தில் வேட்பாளர்கள் அளித்த பிரமான பத்திரத்தில் இருந்த சொத்துப்பட்டியலை அண்ணாமலை திருடி வெளியிட்டுள்ளதாகவும், அண்ணாமலை ஒரு அரசியல் நகைச்சுவை மன்னர் எனவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

VK president Thol Thirumavalavan said that BJP state president Annamalai is a comedy king in politics
அரசியலில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை ஒரு நகைச்சுவை மன்னன் என்று தொல் திருமாவளவன் தெரிவித்துள்ளார்

கோவை: தெற்கு மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் முப்பெரும் விழா மற்றும் மாற்றுக் கட்சியினர் இணைப்பு விழா மற்றும் சனாதள எதிர்ப்பு பொதுகூட்டத்தில் கலந்து கொள்ள வந்த விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கிருஷ்ணகிரி மாவட்டம் அருணபதியில் ஆவண கொலையில் இரண்டு பேர் கொடூரமாக கொல்லப்பட்டிருக்கிறார்கள். இது தாய், மகன் தூங்கும் பொழுது கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சாதி மனிதனை ஆட்டிப்படைக்கிறது. இதில் காயம் அடைந்த அனுசியா என்ற தலித் பெண் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த ஆணவ கொலையை கண்டிக்கிற வகையிலும், ஆணவ கொலை தடுப்புச் சட்டத்தை இயற்ற வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுக்கிற வகையிலும், வருகின்ற 22 ஆம் தேதி கிருஷ்ணகிரியில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தலித் கிறிஸ்தவர்கள் பட்டியல் இனத்திற்கான பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருப்பது அரசியல் உள்நோக்கம் கொண்டது என கூறுவது அபத்தமானது. இது இந்திய ஒன்றிய அரசுக்கான கோரிக்கை. தமிழ்நாடு அரசு அந்த கோரிக்கையை ஆதரிக்கிறது அவ்வளவு தான். முடிவெடுக்க வேண்டிய இடத்தில் இந்திய ஒன்றிய அரசு தான் உள்ளது. டெல்லியில் இருப்பவர்கள் தான் அதில் முடிவெடுக்க முடியும். இது நீண்ட நாள் கோரிக்கை. பல மாநிலங்களில் அரசு இந்த கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே நான்கு மாநிலங்களில் அப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, தற்போது தமிழ்நாடும் அதை பின்பற்றி இருக்கிறது அவ்வளவு தான். இதில் தேர்தல் வாக்குவங்கி அடிப்படையில் எந்த அனுகுமுறையும் இல்லை. மதம் மாறியவர்களில் ஒரு பாகுபாடு நிலவுகிறது. பவுத்தம் மாறினால் இட ஒதுக்கீடு உண்டு, சமனம் மாறினால் இட ஒதுக்கீடு உண்டு, கிரிஸ்தவம், இஸ்லாம் மாறினால் இடஒதுக்கீடு இல்லை என்பது ஒரு பாகுபாடு. அதற்கு அவர்கள் சொல்லுகிற விளக்கம் இஸ்லாமும், கிரிஸ்தவமும் அந்நிய நாட்டு மதங்கள். அதை ஏற்க முடியாது என்று சொல்லுகிறார்கள்.

அது ஒரு கட்சியில் கொள்கையாக இருக்க முடியுமே தவிர ஒரு அரசின் கொள்கையாக இருக்க முடியாது. பாஜக அப்படி ஒரு கருத்து வைத்திருக்கலாம், இவற்றை அந்நிய மதங்களாக கருதலாம். ஆனால் அரசு மத அடிப்படையில் பாகுபாடு பார்க்க கூடாது. மதங்களை மக்கள் விரும்பலாம், மதங்களைச் சார்ந்து மக்கள் வாழலாம் அது வேறு. ஆனால் ஒரு அரசு மதம் சார்ந்து இருக்க கூடாது, மத சார்பு அடிப்படையில் செயல்படக்கூடாது.

அண்ணாமலை வெளியிட்ட பட்டியல் ஊழல் பட்டியலாக இல்லை, சொத்து பட்டியலாக உள்ளது என்று ஊடகங்களில் எதிரும் புதிருமான கருத்துக்கள் மாறி மாறி வந்த வன்னம் உள்ளன. சொத்துபட்டியலைக் கூட தேர்தல் அலுவலகங்களில் வேட்பாளராக போட்டியிட்டவர்கள் தாக்கல் செய்த பிரமான வாக்குமூல பத்திரத்திலே அதையெல்லாம் குறிப்பிட்டிருப்பார்கள். அதைத் திருடி தான் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது என்பது எல்லாராலும் பேசப்படுகிறது.

அவரை பொறுத்தவரையில் எப்பொழுதும் ஊடக வெளிச்சத்தில் தான் இருக்க வேண்டும். தன்னைப் பற்ரி ஊடகங்கள் விவாதிக்க வேண்டும், அதற்காக என்ன விலையையும் கொடுக்க அவர் தயாராக உள்ளார். எத்தகைய போராட்டங்களையும் நடத்துவதற்கு அல்லது அவதூறுகளை பரப்புவதற்கு அல்லது வதந்திகளை பரப்புவதற்கு பொய்களை இட்டுக்கட்டி பேசுவதற்கு கொஞ்சமும் கூச்சமில்லாமல் வெளிப்படையாக செயல்படுகின்ற போக்கு அவரிடத்திலே உள்ளது. சொல்லப்போனால் ஒட்டுமொத்தத்திலே அவர் ஒரு அரசியல் நகைச்சுவை மன்னராக மாறி இருக்கிறார்" எனத் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது கோவை தெற்கு மாவட்ட செயலாளர் பிரபு உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: "உங்களை விட எங்களுக்கு சம்பளம் கம்மி தான்" ஊதிய உயர்வு கேட்ட எம்எல்ஏவுக்கு துரைமுருகன் பதில்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.