கோவை மாநகர காவல் துறையில் கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி, கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் விசிக கோவை மாவட்டச் செயலாளர் பாலசிங்கம் மனு தாக்கல் செய்துள்ளார்.
இதுகுறித்துப் பேசிய பாலசிங்கம், "கடந்த ஒன்பதாம் தேதி புதுவையில் நடைபெற்ற, மகளிர் விடுதலை இயக்க நிகழ்ச்சியில் விசிகவின் தலைவர் தொல். திருமாவளவன் இந்துக்கள் குறித்தும், இந்து கோயில்கள் குறித்தும் அவதூறாகப் பேசியிருப்பதாக, தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்த காயத்திரி ரகுராம் திருமாவளவனை எங்குப் பார்த்தாலும் செருப்பால் அடிக்கவேண்டும்'' என்று பதிவிட்டிருந்தார்.
அந்த ட்விட்டர் பதிவு கண்டனத்திற்குரியது என்றும்; அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி, கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஆகையால், அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேணடுமென்றும் இந்தியச் சட்ட பிரிவு 499 மற்றும் 500இன் கீழ் காயத்ரி ரகுராமுக்கு தண்டனை வழங்க வேண்டும் என்றும் மனு தாக்கல் செய்துள்ளேன் " என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : சிறைக்கைதிகள் தயாரித்த பொருட்கள் காவல் ஆணையர் அலுவலகத்தில் விற்பனை!