கோயம்பத்தூர் மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள வால்பாறை சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட அங்கலக்குறிச்சி கைகாட்டி பகுதியில் நேற்று (பிப்.24), மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் 73ஆவது பிறந்த நாள் பொதுக்கூட்டமானது, சட்டப்பேரவை உறுப்பினர் கஸ்தூரி வாசு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருன்ந்தினராக, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர் சிடிசி அப்துல் ஜப்பார், அதிமுக கட்சி பேச்சாளர் குன்னூர் சிவா ஆகியோர் கலந்துகொண்டனர்.
பின் கஸ்தூரி வாசு பேசுகையில், “ மறந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, தமிழ்நாட்டில் சிறப்பான ஆட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நடத்தி வருகிறார்கள். மக்களின் நலன் கருதி எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர். ஆனால் இதை பொறுத்துக்கொள்ள முடியாமல், திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக மக்களிடம் பொய்யான தகவல்களை அளித்து வருகிறார்.
கடந்த சில நாட்கள் முன்பு பொள்ளாச்சியில் நடந்த திமுக கூட்டத்தில் என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை பரப்பி பேசியுள்ளார் தி.மு.க தலைவர் ஸ்டாலின், என் மீது கூறியுள்ள குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபிக்கத் தயாரா என பொதுமக்கள் மத்தியில் சவால் விடுகிறேன். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இருக்காது. வரும் 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்று ஆட்சியைப் பிடிக்கும்” என பேசினார்.
இதையடுத்து சேலை வேஷ்டிகள் தொகுப்புகள் வழங்கப்பட்டன. பின் மாற்றுத் திறனாளிகளுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டது. இக் கூட்டத்தில், ஒன்றிய செயலாளர்கள் சுந்தரம், அப்புசாமி கார்த்திகேயன், மகாலிங்கம், குணசீலன், வாசு தொழில்நுட்பப் பிரிவு மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: அரசுப் பணியாளர்கள் ஓய்வுபெறும் வயது 60 ஆக உயர்வு