கோவை மாவட்டம் வால்பாறைப் பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டுக்கு ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் ஆக்ஸிஸ் வங்கி ஏடிஎம் மிஷின் பத்து நாட்களுக்கு முன்பு வைக்கப்பட்டது.
காலையில் பணம் எடுக்க வந்த நபர்கள் ஏடிஎம் மிஷின் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு வால்பாறை காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். பின் வால்பாறை காவல் துறையினர் வந்து ஆய்வு செய்தனர். இதனைத் தொடர்ந்து திருடியவர்களின் கைரேகையை ஆய்வு செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், வால்பாறை நகர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் பொதுமக்கள், காவல்துறையினர் சார்பில் கடந்த சில நாட்கள் முன்பு சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்தியதால், கொள்ளையர்கள் தனியார் எஸ்டேட் பகுதியில் உள்ள ஏடிஎம்-யை குறிவைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
கவுண்டம்பாளையத்தில் திருமணத்திற்காக வைத்திருந்த நகை, பணத்தை கொள்ளை!