ETV Bharat / state

கோவையில் கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

கோவையில் ஆந்த்ராக்ஸ் நோயால் யானை உயிரிழந்ததையடுத்து கால்நடைகளுக்குத் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

vaccination to cattle in coimbatore
vaccination to cattle in coimbatore
author img

By

Published : Jul 14, 2021, 2:32 PM IST

கோயம்புத்தூர்: ஆனைகட்டி வனப்பகுதியில் சேம்புகரை என்ற இடத்தில் 12 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உயிரிழந்து கிடந்தது. அந்த யானைக்கு ஆந்த்ராக்ஸ் அறிகுறி தென்பட்டதால் யானைக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் யானைக்கு ஆந்த்ராக்ஸ் நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து நேற்று (ஜூலை 13) யானையின் உடலுக்குத் தீவைத்து எரிக்கப்பட்டது.

யானை உயிரிழந்ததையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேம்புக்கரை வனப்பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட உத்தரவிடப்பட்டது.

கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்கள் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடும் பணியை நேற்று தொடங்கிய நிலையில் இன்று 150 மாடுகள், ஆடுகளுக்குத் தடுப்பூசி செலுத்த முடிவெடுக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதையும் படிங்க: கோவை: ஆந்த்ராக்ஸ் நோய் தாக்கி பெண் யானை உயிரிழப்பு?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.