ETV Bharat / state

டாஸ்மாக் பாரை அடித்து நொறுக்கிய 4 பேர் கைது - சிசிடிவி காட்சி வெளியீடு! - Tamil news

கோவை: டாஸ்மாக் பாரில் தகராறு செய்த 4 பேரை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

சிசிடிவி
சிசிடிவி
author img

By

Published : Feb 18, 2020, 5:05 PM IST

கோவை மேட்டுப்பாளையம் சாலை வெள்ளக்கிணர் பிரிவில் டாஸ்மாக் கடை மற்றும் பார் உள்ளது. இங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று கடையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மதுகுடிக்க வந்தவர்களில் சிலர் சப்ளை செய்யும் கடைகாரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதில் கடைகாரர்கள் மதுகுடிக்க வந்த ஒருவரை அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து, அடிவாங்கிய குடிகாரர் தனது நண்பர்களுடன் ஆட்டோவில் மீண்டும் டாஸ்மாக்கிற்கு வந்து பாரில் உள்ள டேபிள், சேர், டிவி, பிரிட்ஜ் ஆகியவற்றை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த தகராறில் மாஸ்டர் ரோகித் (28), மாஸ்டர் கோவில்பிள்ளை (55), கேசியர் ஐய்யனார் (29), சப்ளையார் தங்கசாமி (46), கிளினிங் பாய் வினோத் (22) ஆகிய 5 பேர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர், அனைவரும் அதே ஆட்டோவில் அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

சிசிடிவி காட்சி

பின்னர் தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த துடியலூர் காவல் துறையினர், பாரில் இருக்கும் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினர். அதன்படி, காவல் துறை உருமாண்டம்பாளையம் சேர்ந்த மதிவானன் (24), ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்த இரண்டு இளைஞர்கள் ரகுபதி (21), கண்ணன் (21) உழைப்பாளர் வீதியைச் சேர்ந்த சக்திவேல் (29) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், தப்பி ஓடிய 4 பேரை காவல் துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்

இதையும் படிங்க: குரூப் 2 தேர்வு முறைகேடு: விசாரணைக்கு ஆஜராக ஒரே ஊரைச் சேர்ந்த 12 பேருக்கு அழைப்பாணை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.