தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 200 உதவி பேராசிரியர் பணியிடங்கள் கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு நிரப்பப்படாமல் உள்ளது.
இந்நிலையில் வேளாண் முனைவர் பட்டதாரிகளை பணிக்கு எடுக்காமல் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் உதவி பேராசிரியர்களை நியமிப்பதாகவும் இதனால் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வேளாண் முனைவர் பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாக வேளாண் முனைவர் பட்டதாரிகள் தெரிவிக்கின்றனர். இதனைக் கண்டித்து கோயம்புத்தூர் வேளாண் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டதாரிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பல்கலைக்கழகம் இந்த முடிவை கைவிட்டு வேளாண் பட்டதாரிகளை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பொங்கல் பரிசு... மாற்றுத் திறனாளிகள் கூடுதல் தொகை கோர முடியாது - தமிழ்நாடு அரசு