கோவை: பொள்ளாச்சி அருகே கணவரை பிரிந்த இளம்பெண் ஒருவர் வாழ்ந்து வருகிறார். இப்பெண்ணை கடந்த 2016ஆம் ஆண்டு கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி, அவரது குடும்ப நண்பர்களான விமல்ராஜ், கார்த்திக் ஆகியோர் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளனர்.
அப்போது வடுகபாளையம் வழியில் செல்லும் புத்து மாரியம்மன் கோயில் அருகே இளம்பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் விசாரணை அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, இந்த வழக்கில் நேற்று (ஜன.6) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது இளம்பெண்ணை தாக்கி கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இருவருக்கும் தலா 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி நந்தினி தேவி உத்தரவிட்டார். குற்றவாளி கார்த்திக் நீதிமன்றத்தில் ஆஜராகாததால் அவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திமிங்கல உமிழ்நீர் கட்டிகளைக் கடத்தியவர்கள் கைது - அதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?