ETV Bharat / state

பால் வியாபாரியிடம் வழிப்பறி செய்த இருவர் கைது - robbers

பொள்ளாச்சி அருகே பால் வியாபாரியை 5 ஆயிரம் ரூபாயை வழிபறி செய்த இருவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பால் வியாபாரியிடம் வழிப்பறி செய்த இருவர் கைது

author img

By

Published : Jul 10, 2022, 3:07 PM IST

கோயம்புத்தூர்: பொள்ளாச்சியை அடுத்த உடுமலை அருகேவுள்ள துங்காவி பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார். இவர் தனியார் நிறுவனத்தில் பால் வாங்கி வீடுகள் மற்றும் கடைகளுக்கு விநியோகம் செய்யும் தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் (ஜூலை 08) வழக்கம் போல் பால் விநியோகம் செய்துவிட்டு பொள்ளாச்சியை அடுத்த சூலக்கல் அருகே உள்ள தரைப்பாலம் பகுதியில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

அங்கு நின்று கொண்டிருந்த நான்கு பேர் திடீரென முத்துக்குமாரை வழிமறித்து மிரட்டி அவரிடம் இருந்த 5 ஆயிரம் ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அந்த சமயத்தில் முத்துக்குமார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்துக் கொண்டார்.

இச்சம்பவம் தொடர்பாக முத்துக்குமார் வடக்கிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து காவலர்கள் துரிதமாக செயல்பட்டு பதிவு எண்ணை வைத்து வழிப்பறியில் ஈடுபட்ட கிணத்துக்கடவு காந்தி நகரைச் சேர்ந்த இளங்கோவன் மற்றும் அம்பேத்கர் வீதியைச் சேர்ந்த லோகநாதன் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் இருவர் தலைமறைவாக உள்ளனர். இதையடுத்து அவர்களையும் காவல் துரையினர் தேடி வருகின்றனர்.

இதையம் படிங்க: காதல் மனைவி துன்புறுத்தல் - விசாரிக்க மறுக்கும் போலீஸ்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.