ETV Bharat / state

சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி: 4 பேர் கைது - சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சி

பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்ற நான்கு பேரை வனத் துறையினர் கைதுசெய்தனர்.

arrest
arrest
author img

By

Published : Jul 21, 2021, 9:17 PM IST

கோயம்புத்தூர்: பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள கட்டாஞ்சிமலை பகுதியில், பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தடாகம் காப்பு காட்டு எல்லையில் நேற்று (ஜூலை 20) நள்ளிரவு டார்ச் லைட் வெளிச்சம் நகர்வதைப் பார்த்த வனத் துறையினர் இது குறித்து ரோந்துப் பணியில் இருந்த வனத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்துசென்ற வனத் துறையினர் அங்கிருந்த நான்கு நபர்களைச் சுற்றிவளைத்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அவர்கள் கேரள மாநிலம் வயநாடு மாவட்ட மனந்தவாடி பகுதியைச் சேர்ந்த ஜாலி ஜேக்கப் (55), பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த மொய்தீன் (44), கோயம்புத்தூர் நரசிம்மநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் (54), மேட்டுப்பாளையம் தாலுகா அத்திக்கடவு சுண்டபட்டி பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் (36) என்பது தெரியவந்தது.

arrest
வனத் துறையினரால் கைதுசெய்யப்பட்டவர்கள்

மேலும் இவர்கள் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயன்றதும் தெரியவந்தது. தொடர்ந்து இவர்கள் வைத்திருந்த ரம்பம், வெட்டுக்கத்தி உள்ளிட்டவற்றை வனத் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதனையடுத்து பிடிபட்ட நான்கு பேர் மீதும் பெரியநாயக்கன்பாளையம் வனத் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலா ரூ.10,000 வீதம் ரூ.40,000 இணக்க கட்டணம் விதித்து எச்சரித்து அனுப்பிவைத்தனர்.

இதையும் படிங்க: நாட்றம்பள்ளியில் சந்தன மரம் கடத்தல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.