ETV Bharat / state

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிய கரோனா!

கரோனா ஊரடங்கு காரணமாக உண்ணிச் செடிகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட வீட்டு உபயோகப் பொருள்களை விற்க முடியாமல் வருமானமின்றி பழங்குடியின மக்கள் தவித்துவருகின்றனர்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிய கரோனா!
பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிய கரோனா!
author img

By

Published : Jun 19, 2020, 7:04 AM IST

Updated : Jul 7, 2020, 7:22 PM IST

கரோனா வைரஸ் (தீநுண்மி) பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் பல தொழில்கள் முடங்கின. இருந்தபோதிலும் தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

மேலும் தொழில் வளர்ச்சிக்காகப் பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கியுள்ளன. ஆனால் இந்தச் சலுகைகள் எதுவும் கிட்டாமல் பல குடிசைத் தொழில்கள் இன்றளவும் முடங்கியுள்ளன.

அப்படி கோவை சாடிவயல் சிறுவாணி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள சிங்கப்பதி பழங்குடியின கிராம மக்கள் லாண்ட்டனா எனப்படும் உண்ணிச் செடிகளைக் கொண்டு வீட்டு உபயோகப் பொருள்களைத் தயாரித்துவருகின்றனர்.

இதன்மூலம் சோபா செட், மேசைகள், குழந்தைகள் விளையாடும் விளையாட்டுப் பொருள்கள் எனப் பலவகை மரச்சாமன்களை கடந்த நான்கு வருடங்களாகத் தயாரித்து விற்பனை செய்துவருகின்றனர். மலைப் பகுதிக்குள் வனவிலங்குகளின் அச்சுறுத்தலுக்கு இடையே சென்று பல இன்னல்களைத் தாண்டி செய்யப்படும் மரப்பொருள்கள் அனைத்தும் செய்யப்பட்டு விற்பனை செய்யமுடியாமல் வீட்டிலேயே உள்ளதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர் பழங்குடியின மக்கள்.

கரோனா ஊரடங்கால் தயாரித்த மரப்பொருள்களை விற்பனை செய்ய முடியாமல் தவித்துவருவதாலும், ஏற்கனவே செய்துள்ள மரப்பொருள்கள் சேதமடையும் வாய்ப்புள்ளதாலும் உரிய இழப்பீட்டை அரசு வழங்க வேண்டும் எனக் கோரிக்கைவைக்கின்றனர் இம்மக்கள்.

பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தையும் முடக்கிய கரோனா!

சிறுத்தை, புலி உள்ளிட்ட வன விலங்குகளுக்கு இடையே வாழ்க்கை நடத்தும் இவர்களின் வாழ்வாதாரம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் இவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, அரசு உரிய ஈழப்பீட்டை வழங்கி, மரப்பொருள்கள் செய்யும் தொழிலை மீட்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: ஏற்றுமதியில்லை... சீசனில் போதிய விற்பனையும் இல்லை: நெருக்கடியில் உழலும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

Last Updated : Jul 7, 2020, 7:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.