கோயம்புத்தூர்: ஆனைமலை புலிகள் காப்பகம் பொள்ளாச்சி வனச் சரகத்திற்கு உட்பட்ட கவியருவி, தமிழ்நாடு - கேரளா மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வால்பாறை செல்லும் சுற்றுலாப் பயணிகள் குடும்பத்துடன் கவியருவியில் குளித்து மகிழ்ந்து செல்வார்கள்.
கடந்த நான்கு மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட கவியருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் காரணமாக தடுப்பு கம்பிகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. இருந்தபோதிலும், வனத்துறையினர் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளித்துள்ளனர். அறிவியல் குளிக்கும்போது தடுப்பு கம்பிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அச்சத்துடன் குளிக்கின்றனர்.
மேலும், ஒயர் மூலம் மரத்துண்டுகள் வைத்து கட்டி வைத்துள்ளனர். அருவியின் தளம் பழுதடைந்துள்ளது, சுற்றுலாப் பயணிகள் கவியருவி உள்ளே செல்லும் வழியில் பாதுகாப்பு கம்பி இல்லாததால் வனத்துறையினர் கட்டிவைத்து உள்ள ஒயர் பிடித்து செல்லும் அவ நிலை உள்ளது. மேலும் சனி, ஞாயிறு கிழமைகளில் அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். சுற்றுலாப் பயணி நலன் கருதி வனத்துறையினர் தடுப்பு கம்பிகள் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: Video: வீட்டின் அருகே தூங்கிய பெண்மீது ஏறி படமெடுத்த நல்லபாம்பு..