ETV Bharat / state

குரங்கு அருவியில் 5ஆவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை! - குரங்கு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை

கோவை: வால்பாறை குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக ஐந்தாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tourists bathe banned in Monkey Falls for the last 5 days
author img

By

Published : Sep 6, 2019, 1:16 PM IST

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை சுற்றுவட்டாரப் பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்துவருவதால், நீர்ப்பிடிப்புப் பகுதிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துவருகிறது.

இதன் காரணமாக பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகளான சோலையார் அணை ஏற்கனவே முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது. அதேபோல் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணை தற்போது 62 புள்ளி 60 அடியாக உயர்ந்துள்ளது.

குரங்கு அருவியில் ஐந்தாவது நாளாக சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

மேலும், ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 100.9 அடியாக உயர்ந்துள்ளது. தொடர்ந்து அணைக்கு தண்ணீர் வந்துகொண்டிருப்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் அணை முழுக் கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக, ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் ஐந்தாவது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத் துறையினர் தடைவிதித்துள்ளனர்.

Intro:aliyerBody:aliyerConclusion:பொள்ளாச்சி வால்பாறையில் தொடர்மழை 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியார் அணை 100.90 அடியாக உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக 5 நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
பொள்ளாச்சி : செப் - 6
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள பொள்ளாச்சி ஆனைமலை வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக நீர்ப்பிடிப்பு பகுதி களுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது இதன் காரணமாக பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்டத்தின் முக்கிய அணைகள் ஆக விளங்குகின்ற சோலையார் அணை ஏற்கனவே முழு கொள்ளளவை எட்டி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது அதே போல் 72 அடி கொள்ளளவு கொண்ட பரம்பிக்குளம் அணை தற்போது 62 புள்ளி 60 அடியாக உயர்ந்துள்ளது வினாடிக்கு 5968 ல் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது அதேபோல் 120 அடி கொள்ளளவு கொண்ட ஆழியாறு அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி நூத்தி 100.9 அடியாக உயர்ந்துள்ளது தொடர்ந்து 2099 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால் இன்னும் ஓரிரு தினங்களில் அணை முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் மேலும் தொடர்ந்து ஆழியார் குரங்கு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 5 நாளாக சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். பேட்டி பெயர் -மணிகண்டன் (விவசாயி)
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.