ETV Bharat / state

பொள்ளாச்சி விவகாரம் - 4 பேரும் அறிவுரைக் கழகத்தில் ஆஜர்

கோவை: பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட நான்கு பேரும் இன்று அறிவுரை கழகத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர்.

rape acquits
author img

By

Published : Apr 10, 2019, 3:36 PM IST

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த மாதம் திருநாவுக்கரசு, சதீஷ், சபரீஷ், வசந்தகுமார் ஆகியோர் சேர்ந்து ஒரு பெண்ணை வாகனத்தில் கடத்தி சென்றனர். வாகனத்தில் இருந்து குதித்து அப்பெண் சிறு காயங்களுடன் தப்பித்துக்கொண்டார். இதுகுறித்து பெண்ணின் அண்ணன் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். பின்னர் அவர்கள் நான்கு பேர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இச்சம்பவம் தொடர்பாக காணொளி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனைத்தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள், பல்வேறு இயக்கங்கள் சார்ந்த பலதரப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம், போராட்டம் என குதித்தனர். பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களின் விளைவாக அவ்வழக்கை டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் பொள்ளாச்சி வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டாஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் தமிழ்நாடு அரசே வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றாமல் சிபிசிஐடி அதிகாரிகளே விசாரித்து வந்தனர். மேலும், இந்த வழக்கைச் சிறப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம் ஏப்ரல் 22 ஆம் தேதி வரை 4 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் குண்டாஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் நண்பகல் ஒரு மணியளவில் காவல்துறை முன்னிறுத்தினர்.

பொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேரும் இன்று அறிவுரை கழகத்தில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கடந்த மாதம் திருநாவுக்கரசு, சதீஷ்,சபரீஷ்,வசந்த குமார் ஆகியோர் சேர்ந்து ஒரு பெண்ணை காரில் கடத்தி சென்றனர். அப்போது அந்த பெண் காரில் இருந்து குதித்து தன்னை காப்பாற்றி கொண்டார். அதன் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன் இது குறித்து சம்பவம் நடந்த 3 நாட்கள் கழித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

பின்னர் அவர்கள் 4 பேர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பையும் அதிர்ச்சையும் ஏற்படுத்தியுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் பல்வேறு இயக்கங்கள் சார்ந்த பலதரப்பட்ட மக்கள் ஆர்ப்பாட்டம் போராட்டம் என மேற்கொண்டனர்.

பல போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்களில் விளைவாக அந்த வழக்கை டிஜிபி சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார். மேலும் பொள்ளாட்சி வழக்கில் தொடர்புடைய 4 பேர் மீதும் குண்டாஸ் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

பின்னர் தமிழக அரசே வழக்கை சிபிஐக்கு மாற்றி அரசானை பிறப்பித்து உத்தரவிட்டது. ஆனால் இன்று வரை இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றாமல் சிபிசிஐடி அதிகாரிகளே விசாரித்து வந்தனர். மேலும் இந்த வழக்கை சிறப்பு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று பலதரப்பட்ட மக்கள் கருத்து தெரிவித்து வந்தனர்.இதனை தொடர்ந்து வழக்கை விசாரித்த கோவை நீதிமன்றம்  ஏப்ரல் 22 வரை 4 பேருக்கு நீதிமன்ற காவல் வழங்கி உத்தரவிட்டது.

இந்த நிலையில் குண்டாஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைந்துள்ள சிறப்பு நீதிமன்றத்தில் உள்ள அறிவுரை கழகத்தில் மதியம் 1 மணியளவில் போலீசார் ஆஜர்படுத்த உள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.