கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் ஒன்றியத்திற்குள்பட்ட இக்கரை போளுவாம்பட்டி ஊராட்சியில் நூறு நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் பணியாற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் ஒன்பது பேர் பணி முடிந்து மூன்று சக்கர பேட்டரி வாகனத்தில் பயணித்துள்ளனர். இந்த வாகனத்தை ராசு என்பவர் ஓட்டி வந்துள்ளார்.
வாகனத்தை அதிக வேகத்தில் ராசு இயக்கியதாக கூறப்படும் நிலையில் நொய்யல் பாலத்தை கடக்க முயன்றபோது கட்டுபாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதில் பழனி (60) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஆலந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பழனிசாமி (60) என்ற நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
மேலும் வாகனத்தில் பயணம் செய்த ஏழு பேர் பலத்த காயங்களுடன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலந்துறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பெண்ணின் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரம்: மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!