ஆர்எஸ்எஸ் சார்பில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் கோயம்புத்தூர் காருண்யா பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. நான்கு நாள்கள் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்துகொள்கின்றனர்.
200-க்கும் மேற்பட்ட உள்ளூர் காவல் துறையினர், 20-க்கும் மேற்பட்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் இணைந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
இந்நிலையில், மோகன் பகவத் தங்கும் இடத்தைப் பார்வையிட கோவை விமான நிலையத்திலிருந்து பொலிரோ வாகனத்தில் ஏழு பேர் கொண்ட மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் வந்தனர்.
காருண்யாவிலிருந்து விமான நிலையம் நோக்கிச் சென்றபோது பேரூர் பச்சாபாளையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த பாதுகாப்பு வாகனம் தலைகீழாக கவிழ்ந்தது. வாகனத்தில் பயணித்த காவல் துறையினர் உள்ளே சிக்கிக்கொண்ட நிலையில் அருகிலிருந்த சிலர் அவர்களைப் பத்திரமாக மீட்டனர்.
இந்த விபத்தில் நல்வாய்ப்பாக காவல் துறையினர் உயிர் தப்பினர். இதனைத் தொடர்ந்து மாற்று வாகனத்தில் காவல் துறையினர் விமான நிலையம் சென்றனர்.
இதையும் படிங்க: ”முதலமைச்சர் வம்பில் மாட்டிக் கொள்ளக்கூடாது!” - துரைமுருகன் அறிவுரை