ETV Bharat / state

காசி தமிழ் சங்கமம்; கோவையில் இருந்து புறப்பட்ட இரண்டாம் கட்ட ரயில்! - கோவையில் இருந்து புறப்பட்டது

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு கோவையிலிருந்து புறப்பட்ட இரண்டாம் கட்ட ரயிலில் ஏராளமான பயணிகள் சென்றனர்.

காசி தமிழ் சங்கமம்; இரண்டாம் கட்ட ரயில் கோவையில் இருந்து புறப்பட்டது

author img

By

Published : Nov 20, 2022, 11:00 AM IST

கோவை: காசிக்கும் தமிழகத்திற்குமான ஆன்மீகம் மற்றும் கலாச்சார தொடர்பை வலுப்படுத்தும் வகையில், மத்திய அரசு துவங்கியுள்ள காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கான இரண்டாம் கட்ட ரயில் சேவை, கோயம்புத்தூரில் இருந்து இன்று அதிகாலை 4.40 மணிக்கு புறப்பட்டது.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த 83 பயணிகள் கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து காசி தமிழ் சங்கமம் ரயிலில் பயணத்தை துவங்கினர்.

கோவையில் இருந்து புறப்பட்ட இரண்டாம் கட்ட ரயில்!

முதற்கட்ட பயணத்தில் மாணவர்கள் குழுக்களாக பங்கேற்று இருந்த நிலையில், இந்த ரயிலில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பாளர்கள், விசைத்தறி நெசவாளர்கள் மற்றும் இசை கலைஞர்கள் என ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர்.

காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு செல்லும் பயணிகளை கோயம்புத்தூர் மாநகர மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியும், மலர் தூவியும் உற்சாகமாக வழி அனுப்பி வைத்தனர்.

காசி தமிழ்ச் சங்கமம் ரயில் சேவை கோயம்புத்தூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று அதிகாலை துவங்கப்படுவதையடுத்து ரயில்வே மற்றும் மாநகர காவல்துறையினர் 200க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் வேட்டி சேலை: 15 வண்ண டிசைன்களில் வழங்க அரசு முடிவு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.