பொள்ளாச்சி - உடுமலை சாலையில் செயல்பட்டு வரும் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பொதுமக்களின் வாகனச் சான்றிதழ், தற்போது ஸ்மார்ட் கார்டாக வழங்கப்படுகிறது. அவ்வாறு வழங்கப்படும் ஸ்மார்ட் கார்டுகளின் தகவல்களை, முகவராகப் பணியாற்றி வரும் அங்குலிங்கம் என்பவர் திருடி, தனியார் நிதி நிறுவனங்களில் வைத்து, பல லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளார்.
இச்சம்பவம் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், தனக்கு வழங்கப்பட்ட வாகன சான்றிதழின் ஸ்மார்ட் கார்டில், தவறு இருப்பதாக ஒருவர் வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தார். அதன் பிறகே இந்த மோசடி சம்பவம் குறித்து அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் முருகானந்தம் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் திருட்டுப் பணியில் ஈடுபட்ட முகவர் அங்குலிங்கத்தைத் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கோயில் காணிக்கையை கையாடல் செய்த 3 பூசாரிகள் பணிநீக்கம்