கோவை மாவட்டம், அன்னூர்ப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனையில் மருத்துவர் பாத்திமா அவரது கைப்பை, மடிக்கணினி ஒன்றினை, மருத்துவர்கள் ஓய்வு அறையில் வைத்துவிட்டு நோயாளிகளைப் பார்க்கச் சென்றுள்ளார். அதன்பின் ஓய்வுக்காக அறைக்கு வந்து பார்த்தபோது, பொருட்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து மருத்துவர் அன்னூர் காவல்துறையிடம் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது அங்கிருந்த சிசிடிவியை ஆய்வு செய்தனர்.
அதில் சந்தேகத்திற்குரிய நபர் ஒருவர், அந்த ஓய்வு அறைக்குச் சென்று, அங்கு உள்ள மடிக்கணினி ஒன்றை எடுத்து கைப்பையில் போட்டுக்கொண்டு சென்றது பதிவாகி இருந்தது. பின்னர் அந்த நபர் அவரது இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு, மருத்துவமனையில் இருந்து வெளியேறிய காட்சியும் பதிவாகியிருந்தது.
பின் இது குறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்ததோடு, சிசிடிவி காட்சிகளைக் கொண்டும், இருசக்கர வாகன எண்ணைக் கொண்டும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் விதிகளை மீறி வெட்டிய மரங்கள் - உயர் அலுவலர்கள் ஆய்வு