ETV Bharat / state

கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் வழங்குவதுதான் தமிழ்நாடு அரசியல் - பாஜக அண்ணாமலை

கோயம்புத்தூர்: தமிழ்நாடு மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் மக்களுக்கு 2000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழ்நாடு அரசியல் எனத் தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை பேசியுள்ளார்.

அண்ணாமலை
அண்ணாமலை
author img

By

Published : Dec 21, 2020, 7:47 AM IST

Updated : Dec 21, 2020, 1:07 PM IST

மத்திய அரசால் அண்மையில் கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களின் நன்மைகள் குறித்து விளக்கும் கூட்டம் பாஜக சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் வேளாண்மைச் சட்டங்களின் நன்மைகள் குறித்து பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை பரப்புரை மேற்கொண்டார்.

வேளாண் சட்டம்
வேளாண் சட்டம்

இறுதியில் கருமத்தம்பட்டியில் வேளாண் சட்டங்கள் குறித்து நேற்றிரவு (டிச. 20) பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார்.

ரஜினியை நம்பலாமா

modi
modi

பாஜகவிற்கு மக்கள் வாக்களிக்கவில்லை எனில் தலைக்கு மேல் சீரியல் லைட் வைத்திருக்கும் தலைவர்கள், காரின் டயரில் விழுந்து கும்பிடுபவர்கள்தான் உங்களுக்கு அரசியல்வாதிகளாக வாய்ப்பார்கள்.

பாஜக அண்ணாமலை பிரச்சாரம்
பாஜக அண்ணாமலை பிரச்சாரம்

சீமான், கமல் போன்றவர்களை மக்கள் நம்பக் கூடாது, காங்கிரஸ் போன்ற கட்சிகளையும் மக்கள் நம்பக் கூடாது எனக் கடுமையாக விமர்சித்தார். இருப்பினும் ரஜினியை அண்ணாமலை ஒருவார்த்தைகூட விமர்சிக்காதது கவனிக்கத்தக்க ஒன்றாகும். அவரது இந்தப் பேச்சு ரஜினியுடன் பாஜக கூட்டணிக்கு அச்சாரமா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

2000 Vs 2500

தமிழ்நாடு மக்களிடமிருந்து கொள்ளையடித்த பணத்தை தேர்தல் நேரத்தில் மக்களுக்கு ஓட்டுக்கு 2000 ரூபாயாக கொடுப்பதுதான் தமிழ்நாடு அரசியல் என விமர்சனம் செய்தார்.

கொள்ளையடித்த பணத்தை தமிழ்நாடு அரசு தேர்தல் நேரத்தில் வழங்கும் - அதிமுகவைச் சீண்டிய அண்ணாமலை

மோடிக்கு தமிழ்நாடு மீது பாசம் அதிகம்

modi
modi

"2021 சட்டப்பேரவைத் தேர்தல் மிகவும் முக்கியமானது. பிரதமர் மோடி தமிழ்நாடு மக்கள் அதிக மீது பாசம் கொண்டவர். தமிழ்நாட்டிற்கு அவர் வந்தால் வேட்டிதான் கட்டுவார்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் தூங்கும் திமுக எம்பிக்கள்

வேளான் சட்டங்கள் திரும்பப் பெறும்வரை போராட்டம் தொடரும்

மேலும், அண்ணாமலை, "திமுக எம்பிக்கள் டெல்லிக்கு விமானத்தில் சென்று நாடாளுமன்ற கேன்டீனில் சாப்பிட்டுவிட்டு தூங்குகின்றனர். இங்கு வந்து பிரதமர் மோடி சரியில்லை என்று பேசுகின்றனர். திமுக எம்.பி.க்களுக்குத் தைரியம் இருந்தால் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து எதிர்க்கட்சியினர் தவறான பரப்புரை மேற்கொண்டுவருகின்றனர், விவசாயிகளைக் காக்கவே இந்தச் சட்டங்களை பிரதமர் மோடி கொண்டுவந்துள்ளார்" எனத் தெரிவித்தார்.

Last Updated : Dec 21, 2020, 1:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.