கோவை: கோவை மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் தொகுப்பு இன்று காலை முதல் வழங்கப்பட்டுவருகிறது. அவிநாசி சட்டப்பேரவை உறுப்பினரும் தமிழ்நாடு சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் கலந்துகொண்டு பிள்ளையப்பம்பாளையம் பகுதியிலுள்ள நியாயவிலைக் கடையில் பொதுமக்களுக்குப் பொங்கல் தொகுப்புகளை வழங்கி உரையாற்றினார்.
அப்போது, "அவிநாசி அத்திக்கடவு நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டம் முடியும் நிலையில் உள்ளது. விரைவில் அனைத்துக் குளங்களுக்கும் தண்ணீர் கொண்டுவரப்படும். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகள் ஒவ்வென்றையும் அதிமுக அரசு நிறைவேற்றிவருகிறது. அதுபோக, பல்வேறு நலத்திட்டப் பணிகளும் நடைபெற்றுவருகின்றன" என்றார்.
மேலும், அன்னூர் பேருந்து நிலையம் அருகே வாரச் சந்தைக்கான புதிய கட்டடப் பணிகளைத் தொடங்கிவைத்து அம்மா இருசக்கர வாகனங்களை உழைக்கும் மகளிருக்கு வழங்கினார்.
இதையும் படிங்க: பெண்கள் வாழ்வாதாரம் மேம்பட ரூ. 80 கோடி கடனுதவி: அமைச்சர் எஸ்.பி வேலுமணி