ETV Bharat / state

கோவையில் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தபெதிகவினர் கைது - TN Govet

கோவை காந்திபுரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவ பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவையில் ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தபெதிகவினர் கைது!

author img

By

Published : Jan 10, 2023, 1:17 PM IST

Updated : Jan 10, 2023, 1:26 PM IST

கோயம்புத்தூர்: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு - தமிழகம் தொடர்பாக பேசியதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து நேற்று (ஜன.9) நடைபெற்ற தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரை நிகழ்த்திய ஆளுநர், திராவிடம், அம்பேத்கர் போன்ற சொற்கள் அடங்கிய பத்தியை வாசிக்காதது பெரும் சர்ச்சையானது.

கோவை காந்திபுரத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் உருவ பொம்மையை எரித்த தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர்

இந்த நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் சிலை முன்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இரு இடங்களில் ஆளுநரின் உருவப்படம் மற்றும் உருவ பொம்மையை எரித்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். இதனிடையே செய்தியாளர்களைச் சந்தித்த தபெதிக அமைப்பு செயலாளர் ஆறுசாமி, “பல்வேறு போராட்டங்களுக்கு பின், தமிழ்நாடு என பெயர் வைக்கப்பட்டது. தற்போது ஆளுநர் தமிழ்நாடு என்ற பெயரை சொல்வதற்கு கூட தயங்குகிறார்.

ஆந்திரபிரதேசம் மற்றும் மத்தியபிரதேசம் போன்றவற்றில் இருக்கக்கூடிய ‘பிரதேசம்’ என்கிற சொல்லும் நாட்டை குறிப்பதுதான். அப்படி இருக்க, தமிழ்நாடு என்று சொல்ல மாட்டேன் என ஆளுநர் கூறுவதை கண்டித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. சமூக நீதி, பெண் உரிமை, பெரியார், அம்பேத்கர், அண்ணா ஆகிய வார்த்தைகளை கூற மறுத்திருப்பது கண்டிக்கத்தக்கது. சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பே அவர் எழுந்து சென்றது ஜனநாயக மரபு கிடையாது” என்றார்.

தொடர்ந்து ஆளுநரின் உருவ பொம்மையை எரித்த தபெதிகவினரை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து தகவல் அறிந்த பாஜகவினர், சித்தாபுதூரில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகம் முன்பாக திரண்டனர். பின்னர் தபெதிகவினரை கண்டித்து போராட்டம் நடத்த காந்திபுரம் பேருந்து நிலையம் நோக்கிச் சென்ற பாஜகவினரை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இதையும் படிங்க: தமிழகம் என்ற சொல் தேசவிரோதச் சொல்லா ? வானதி சீனிவாசன் கேள்வி

Last Updated : Jan 10, 2023, 1:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.