ETV Bharat / state

புள்ளி மான் இறைச்சி விற்க முயற்சி.. கணவன், மனைவிக்கு தலா ரூ.10ஆயிரம் ஃபைன் - மான் இறைச்சி

காரமடை அருகே புள்ளிமான் இறைச்சியினை விற்க முயன்ற கணவன், மனைவி இருவருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்த வனத்துறையினர், அவர்களை எச்சரித்து அனுப்பினர்.

புள்ளி மான் இறைச்சி விற்க முயற்சி
புள்ளி மான் இறைச்சி விற்க முயற்சி
author img

By

Published : Dec 22, 2022, 5:29 PM IST

கோயம்புத்தூர்: காரமடை கண்டியூர் அருகே மான் இறைச்சி விற்பனை செய்வதாக காரமடை வனத்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், காரமடை வனச்சரகர் திவ்யா தலைமையிலான வனத்துறையினர், கண்டியூர் பகுதியில் சோதனை நடத்தினர்.

அதில், கெம்மாரபாளையம் சந்தனபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி, அவரது மனைவி அம்மாசை, இருவரும் புள்ளி மான் இறைச்சியினை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. இது குறித்து அவர்களிடம் விசாரித்ததில், சுருக்கு கம்பியில் சிக்கி உயிரிழந்த புள்ளி மானின் உடலை வெட்டி விற்பனை செய்ய இருந்தது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து அவர்கள் இருவருக்கும் தலா 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் இருவரையும் இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது என எச்சரித்து அனுப்பினர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.