இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்துவருகிறது. இதைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகின்றன.
மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான திரையரங்குகள் மால்கள், ஜவுளிக்கடைகள், கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்டவற்றை 31ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொள்ளாச்சி வால்பாறையில் கரோனா வைரஸ் காரணமாக வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. மேலும், வழிபாட்டுத் தலங்களில் வழக்கம்போல் பூஜைகள் நடைபெறும் எனக் கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கரோனா: ஊடகவியலாளர்களுக்கு முகக்கவசம் வழங்கிய ஸ்டாலின்