ETV Bharat / state

"அரசு துறைக்கு நிதி இருக்கோ இல்லையோ.. விளம்பரத்தில் உதயநிதி இருக்கிறார்.." - தமிழிசை தடாலடி!

திமுகவின் இரண்டாண்டு சாதனைகள் குறித்து அமைச்சர்கள் கொடுத்த விளம்பரங்களுக்கு நிதி இருக்கிறதோ இல்லையோ, ஆனால் விளம்பரத்தில் உதயநிதி இருக்கிறார் என தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

Tamlisai Soundararajan
Tamlisai Soundararajan
author img

By

Published : May 7, 2023, 4:19 PM IST

"அரசு துறைக்கு நிதி இருக்கோ இல்லையோ.. விளம்பரத்தில் உதயநிதி இருக்கிறார்.." - தமிழிசை சவுந்தரராஜன்!

கோயம்புத்தூர் : விமான நிலையத்தில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, "இரு முதலமைச்சர்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். முதலாவதாக அண்ணன் ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவி ஏற்று, இரண்டு ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கும், புதுச்சேரியில் அண்ணன் ரங்கசாமியும் இன்று தான் பதவியேற்றார்கள். எனவே அவர்கள் இருவருக்கும் வாழ்த்துகள்.

தமிழ்நாடு அரசின் இரண்டு ஆண்டு சாதனைகள் என நேற்று முதல் வந்து கொண்டிருக்கிறது. மரியாதைக்குரிய அண்ணன் ஸ்டாலினுக்கு ஒரு கேள்வி. சாதி, மதம் பிரித்து பார்ப்பவர்களால் திராவிட மாடலை புரிந்து கொள்ள முடியாது என்பது உங்களது கருத்து. இந்துக்களுக்கு நீங்கள் வாழ்த்துச் சொல்ல மறுக்கிறீர்கள்.

நான் ஒரு தமிழகத்தில் பிறந்த இந்துவாக கேட்கிறேன், எதை வைத்துப் பிரித்து பார்ப்பதால் நீங்கள் தீபாவளிக்கு வாழ்த்துச் சொல்ல மறுக்கிறீர்கள். எல்லா மத விழாக்களுக்கும் வாழ்த்துச் சொல்ல வேண்டும். எனவே, நீங்கள் எப்படி பிரித்துப் பார்க்கிறீர்கள் என்று பதில் சொன்னால் அது நன்றாக இருக்கும்.

இன்று எல்லா அமைச்சர்களும் பத்திரிகையில் இரண்டாண்டு சாதனை குறித்து விளம்பரங்கள் கொடுத்து இருக்கிறார்கள். விளம்பரங்களில் நிதி இருக்கிறதோ, இல்லையோ அனைத்திலும் உதயநிதி இருக்கிறார். எனவே வாரிசை உருவாக்கிய சாதனை ஈராண்டு சாதனை. அறிவிப்பு வருகிறதோ இல்லையோ அறிவிப்புகளை திரும்பப் பெறும் ஆட்சியாக தமிழகத்தில் இந்த ஆட்சி இருக்கிறது.

அண்ணன் வைகோ எந்த நிலையில் இருக்கிறார் எனத் தெரியவில்லை. அவர் ஆக்டிவாக தான் இருக்கிறாரா?. அவரை காலாவதியான அரசியல்வாதி என நான் சொல்லமாட்டேன். கேரளா ஸ்டோரி திரைப்படத்தை நான் பார்க்கலாம் என இருக்கிறேன். ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு எதிரானதாக இது சித்தரிக்கப்பட்டு உள்ளது என கூறப்படுகிறது.

தீவிரவாதத்திற்கு ஆதரவாக இருக்க நினைப்பவர்கள் படத்திற்கு எதிராக இருக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிராக இருப்பவர்கள் படத்தை ஆதரிப்பார்கள். எனவே, அது அவரவர் மன நிலையைப் பொறுத்தது. பாரத பிரதமர் சொன்னதைப் போல தீவிரவாதம் எந்த விதத்தில், எந்த இடத்தில், எந்த வகையில் எந்த ரூபத்தில் இருந்தாலும் அதை ஒத்துக்கொள்ள முடியாது.

பெண்களையும் குழந்தைகளும் பாதிப்பதாக இருந்தால் அதன் உண்மைத்தன்மை தெரிந்து இருக்க வேண்டும். இந்தப் பிரச்சனை தொடர்பாக கேரள சட்டமன்றத்திலேயே பேசப்பட்டுள்ளது. இவர்களுக்கு வேண்டிய கருத்தை சொன்னால் அது கருத்துச் சுதந்திரம். ஆனால், சொல்ல வேண்டிய கருத்தைச் சொன்னால் அதை தடை செய்ய வேண்டும்.

எனவே, இந்தப் படத்தை எல்லோரும் பார்க்க வேண்டும் என்பதே எனது கருத்து. கோவையில் இருந்து கனிம வளம் அதிகமாக சென்று கொண்டிருப்பதாகத் தகவல் வந்து கொண்டிருக்கிறது. கட்டுப்படுத்தப்பட வேண்டிய கொள்ளையில் கனிமவள கொள்ளையும் ஒன்று. தமிழகத்தில் கனிமவளக் கொள்ளை என்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று" என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

இதையும் படிங்க : தருமபுரியில் நீட் தேர்வு எழுத டவுசருடன் வந்த மாணவர்கள் - திருப்பி அனுப்பிய அதிகாரிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.