அவிநாசி அடுத்த தெக்கலூரில் அமைந்துள்ள தனியார் பின்னலாடை நிறுவன பெண் ஊழியர்கள் கல்விப் பிரிவின் வெள்ளிவிழா நிகழ்ச்சியில், தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், ‘பெண்களால் முடியாது என இந்த உலகில் எதுவும் கிடையாது. பெண்கள் இந்த காலத்தில் சிக்கல் மட்டுமல்ல, நக்கலையும் சந்திக்கிறார்கள். அதையும் தாண்டி துணிச்சலோடு சாதிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.
தெலங்கானா பெண் மருத்துவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து பேசிய அவர், ‘மொட்டுகளை மலரவிடுங்கள், பூத்துக் குலுங்கட்டும். கருக்கி விடாதீர்கள் என கோரிக்கை விடுத்திருந்தேன். கோரிக்கை வைக்கும் அளவு நாம் தாழ்ந்தவர்கள் அல்ல, எனவே யோகாவுடன் தற்காப்பு கலைகளையும் கற்க வேண்டும். அது தவறான எண்ணத்துடன் நோக்குபவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதுடன் அவர்களை ஒழிக்கும்’ என்றார்.
தமிழக அரசு மாணவிகளுக்கு தற்காப்பு கலைகளையும் கற்பிக்க வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்தார்.
இதையும் படிங்க: தங்கைக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்தவருக்கு 10 ஆண்டுகள் சிறை!