ETV Bharat / state

"அநாவசியமாக சத்தம் போட்டால் சட்ட ரீதியாக சந்தித்தாக வேண்டும்" - தமிழிசை சௌந்தரராஜன் - telagana governor in coimbatore

Tamilisai Soundararajan press meet: கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் எந்த வளர்ச்சியும் நடக்கவில்லை என முதலமைச்சர் கூறுவது சரியானது அல்ல என ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார்.

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 23, 2023, 7:08 PM IST

கோயம்புத்தூர்: கோவையில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வந்த தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை செளந்தரராஜன், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர், "பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாடு வேகமாக முன்னேறுவதற்கு இந்த இட ஒதுக்கீடு முதல் படியாக இருக்கும். இதனை இந்தியாவில் உள்ள பெண்கள் கொண்டாட வேண்டும்" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், கடந்த 10 ஆண்டுகளில் இந்தியா பல்வேறு விதமாக முன்னேற்றம் அடைந்து வருவதாகவும், ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் ஒன்றுமே நடக்கவில்லை என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்லுவது சரியல்ல என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், "உயர் கல்வி மருந்துவப் படிப்பில் ஏறக்குறைய 70 ஆயிரம் இடங்கள் உள்ளன. அதில் 4 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது. ஜீரோ பர்சன்டைல் என்பது இந்தாண்டு காலியிடங்களை நிரப்ப, ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. இதனை வைத்து நீட் தேவையில்லை என்று கூறுவது தவறு.

மருத்துவக் கல்லூரிகள், மருத்துவ படிப்புகளுக்கான இடங்கள் அதிகமாகி ‌இருப்பதால் வாய்ப்புகளும் அதிகம் கிடைக்கிறது. மருத்துவ உயர் கல்வி பயிற்றுவிக்க ஆசிரியர் கிடைக்கவில்லை. இதனால், இந்த ஜீரோ பர்சண்டைல் ஒருமுறை கொண்டு வரப்பட்டு, வெளிப்படையான கலந்தய்வு நடத்தப்பட்டு இடங்கள் நிரப்பப்படும். இதனை வைத்து நீட் தேர்வே தேவை இல்லை என்று கூறுவது தவறு.

மேலும் கவுன்சிலிங் செல்லும்போது, தகுதியான மருத்துவர்களுக்குத்தான் வாய்ப்புகள் கிடைக்கும். இதனால் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மட்டும் பலனடையும் என்று கூறுவது சரியல்ல. அரசுக் கல்லூரிகளும் பலனடையும், தனியார் கல்லூரிகளும் பலனடையும். இதனை வைத்து அநாவசியமாக அரசியல் செய்யக் கூடாது" என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் தமிழிசை, "சனாதனம் ஒழிப்பு என்றவர்கள் ஏன்‌ மத, சாதி வேறுபாடுகளை பேசுகிறார்கள்? நலம் பயின்ற பள்ளிகளில் மலம் கலக்கப்படுகிறது, ஏன்? இதற்கு முன்பு எப்போது இப்படி நடந்தது? இந்துக்கள் படிக்க மற்றவர்கள் காரணம் என சபாநாயகர் சொல்வது நியாயமா?" என்ற கேள்விகளை எழுப்பினார்.

மேலும், "சனாதனம் குறித்து உதயநிதி ஸ்டாலின் சட்ட ரீதியாக சந்தித்துதான் ஆக வேண்டும். அநாவசியமாக சத்தம் போட்டால் சட்டரீதியாக சந்தித்துதான் ஆக வேண்டும்" என்று சாடினார். மேலும், நாடாளுமன்றத்தில் பாஜக எம்பி பேசியது தவறு என்றும், அதற்கு ஏற்கனவே கண்டனம் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்

"நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் உரை நிகழ்த்தும்போது, குடியரசுத் தலைவர் அழைக்கப்படுவார். நடிகராக இருந்த உதயநிதி ஸ்டாலினே, நாடாளுமன்றத்திற்கு நடிகை வருவதை தவறு என சொல்வது சரியா? இவர்களது பொதுநோக்குதான் என்ன? இன்று குடியரசுத் தலைவருக்கு ஆதரவு தெரிவித்து பேசுகிறார்கள்.

ஆனால், குடியரசுத் தலைவராக போட்டியிட்டபோது ஏன் அவரை ஆதரிக்கவில்லை? பெண்கள், பழங்குடியினர், கீழ்நிலையில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைய அங்கீகாரம் தர வேண்டும் என்று நீங்கள் ஏன் ஆதரிக்கவில்லை? அவர் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றதற்கும் பிரதமர் மோடிதான் காரணம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: "மகளிர் இட ஒதுக்கீடு" பிரதமர் மோடி அரசின் வரலாற்று சாதனை - வானதி சீனிவாசன் பெருமிதம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.