கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் பெரியநெகமம் பேரூராட்சி பகுதிகளிலுள்ள பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு 232 பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி குஞ்சுகளை வழங்கினார்
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ”தமிழ்நாட்டில் இருந்து டெல்லிக்கு சென்று மத்திய அரசின் பல்வேறு பதவிகளை வகித்த மறைந்த நிதி அமைச்சர் சி. சுப்பிரமணியம் அய்யா, முன்னாள் நிதி அமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் என பல்வேறு தலைவர்கள் பெருமை சேர்த்தார்கள்.
ஆனால் தமிழ்நாட்டிலிருந்து இருந்து டெல்லிக்கு சென்று தகவல் தொடர்புத்துறை அமைச்சராக பொறுப்பேற்று திகார் சிறையில் ஜெயிலில் அடைக்கப்பட்டு தமிழ்நாடு மக்களுக்கு தலைகுனிவை உண்டாக்கியவர் ராஜா. இவருக்கு ஜெயலலிதாவை பற்றியோ, அதிமுக பற்றியோ விமர்சிப்பதற்கு எந்த யோக்கியதையும் கிடையாது.
அதேசமயம் குற்றச்சாட்டுகள் சரியாக நிரூபிக்கப்படவில்லை என்பதற்காக அவர் விடுதலை செய்யப்பட்டாரே தவிர, நீதிபதிகள் தீர்ப்பில் குற்றமே நடைபெறவில்லை என்று எந்த இடத்திலும் சொல்லவில்லை அப்பீல் சென்றுகொண்டிருக்கிறது. மேல் விசாரணை இப்போது சென்று கொண்டிருக்கிறது மேல் விசாரணை முடிவுக்கு பிறகுதான் அவர்களுடைய யோக்கியதை அவருடைய, அருகதை நாட்டு மக்களுக்கு தெரியும்.
தமிழ்நாட்டிற்கு தலைகுனிவை உண்டாக்கிய ஸ்பெக்ட்ரம் ராஜா என்றால் உலகம் முழுதும் தெரியும். அப்படிப்பட்ட ஒரு நபர் ஜெயலலிதாவைப் பற்றியும், எங்களுடைய கட்சியைப் பற்றியும், அமைச்சரவை பற்றியும் விமர்சனம் செய்வதற்கு எந்த அருகதையும் கிடையாது.
குடிமராமத்து திட்டம் என்பது முழுக்க முழுக்க விவசாயிகளால் முதலமைச்சருடைய ஆணையின்படி விவசாயிகளே மேற்கொள்ளும் பணியாகும். இதில் எந்த வகையில் ஊழல் நடைபெறும் என்பதை ஸ்டாலின்தான் விளக்க வேண்டும். மஞ்சள் காமாலைகாரனுக்கு கண்டதெல்லாம் மஞ்சள் என்பதைப்போல ஸ்டாலின் ஒரு ஊழல்வாதி அவர்கள் குடும்பமே ஒரு ஊழல் குடும்பம் எனவே அவர்கள் கண்ணுக்கு தெரிவதெல்லாம் ஊழல்தான்” என்றார்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல்: ஆந்திர அரசு கோரிக்கை நிராகரிப்பு