ETV Bharat / state

உங்களுக்கு இரக்கம் இல்லையா?... நீட் விவகாரத்தில் பொங்கிய வைகோ!

author img

By

Published : May 12, 2019, 7:41 AM IST

கோவை: நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் மனிதாபிமானம் இல்லாமல் சோதிக்கப்பட்டனர் என்று சூலூரில் நடந்த பரப்புரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்.

வைகோ

சூலூர் சீரணி மைதானத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நேற்று மாலை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "50 ரூபாய் கொடுத்து கேபிள் தொலைக்காட்சியினை முன்பு பார்த்தீர்கள், ஆனால் இப்போது அந்த கட்டணம் 300 ரூபாய் ஆகி இருக்கின்றது.

300 ரூபாய்க்கு கிடைத்த சமையல் எரிவாயு உருளை விலை 900 ரூபாயை எட்டியிருக்கின்றது. தேர்தலில் வென்ற பின் பழைய கட்டணத்திலேயே கேபிள் சேனல் கிடைக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார். இலவசமாகவே கேபிள் சேனல்களை மக்கள் பார்ப்பதற்கு ஸ்டாலின் திட்டம் வைத்திருப்பார்" என்றார்.

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் அடிப்படை அறிவு, மனிதாபிமானம் இல்லாமல் சோதிக்கப்பட்டனர் என குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்யாமல் தமிழ்நாட்டில் நுழையாதீர்கள் என சொல்லும் நெஞ்சுரம் ஏன் இல்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.

சூலூர் சீரணி மைதானத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் நேற்று மாலை பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது. சூலூர் சட்டப்பேரவை தொகுதி திமுக வேட்பாளர் பொங்கலூர் பழனிசாமிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்தப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பரப்புரை மேற்கொண்டார்.

அப்போது பேசிய அவர், "50 ரூபாய் கொடுத்து கேபிள் தொலைக்காட்சியினை முன்பு பார்த்தீர்கள், ஆனால் இப்போது அந்த கட்டணம் 300 ரூபாய் ஆகி இருக்கின்றது.

300 ரூபாய்க்கு கிடைத்த சமையல் எரிவாயு உருளை விலை 900 ரூபாயை எட்டியிருக்கின்றது. தேர்தலில் வென்ற பின் பழைய கட்டணத்திலேயே கேபிள் சேனல் கிடைக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார். இலவசமாகவே கேபிள் சேனல்களை மக்கள் பார்ப்பதற்கு ஸ்டாலின் திட்டம் வைத்திருப்பார்" என்றார்.

நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர்கள் அடிப்படை அறிவு, மனிதாபிமானம் இல்லாமல் சோதிக்கப்பட்டனர் என குற்றம்சாட்டிய அவர், மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்யாமல் தமிழ்நாட்டில் நுழையாதீர்கள் என சொல்லும் நெஞ்சுரம் ஏன் இல்லை? எனவும் கேள்வி எழுப்பினார்.

சு.சீனிவாசன்.        கோவை



நீட் தேர்விற்கு செல்லும் மாணவர்களை சோதனை செய்வது போல,
ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், குரூப் 1, குரூப் 2  தேர்வு எழுத செல்பவர்களுக்கு ஏன் சோதனை நடத்துவதில்லை எனவும் அடிப்படை அறிவு, மனிதாபிமானம் இல்லாமல் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சோதிக்கப்படுகின்றனர் எனவும் கோவை சூலூரில் நடந்த பொது கூட்டத்தில் மதிமுக பொதுசெயலாளர் வைகோ தெரிவித்தார்.


கோவை சூலூர் சீரணி மைதானத்தில் மதசார்பற்ற முற்போற்கு கூட்டணி சார்ப்பில் இன்று மாலை பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.சூலூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர்  பொங்கலூர் பழனிச்சாமிக்கு ஆதரவாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய வைகோ, 50 ரூபாய் கொடுத்து கேபிள் தொலைக்காட்சியினை முன்பு பார்த்தீர்கள், ஆனால் இப்போது அந்த கட்டணம்  300 ரூபாய் ஆகி இருக்கின்றது எனவும் 300 ரூபாய்க்கு கிடைத்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 900 ரூபாயை  எட்டியிருக்கின்றது எனவும் தெரிவித்தார்.தேர்தலில் வென்ற பின் பழைய கட்டணத்திலேயே கேபிள் சேனல் கிடைக்கும் என திமுக தலைவர் ஸ்டாலின் சொல்லி இருக்கின்றார் எனவும், இலவசமாகவே கேபிள் சேனல்களை மக்கள் பார்ப்பதற்கு  ஸ்டாலின் திட்டம் வைத்திருப்பார் எனவும் வைகோ தெரிவித்தார்

டைம் பத்திரிகை அட்டைபடத்தில் பிரதமர் மோடி படத்தை போட்டு இருப்பது பாரட்டுவதற்கு அல்ல என கூறிய அவர்,
தலைமை தேர்தல் ஆணையம் நடுநிலை தவறிவிட்டது என முன்னாள் தேர்தல் ஆணையர் குரோசி நாளிதழ்களில் எழுதுகின்றார் எனவும் தெரிவித்தார்.இராணுவத்தை தேர்தல் பிரச்சாரத்தில் பயன்படுத்த கூடாது. அவர்களை எந்த கட்சியும் சொந்தம் கொண்டாட கூடாது . ஆனால் பிரதமர் மோடி இராணுவம் குறித்து பேசுகின்றார்.இது முதல் தவறு எனவும்வயநாட்டில் ராகுல் காந்தி போட்டியிடுகின்றார்,  இஸ்லாமியர்கள் அதிகமாக இருக்கும் பகுதியில் ராகுல் போட்டியிடுகின்றார் என மோடி சொல்கின்றார். மதங்களை சொல்லி பிரச்சாரம் செய்ய கூடாது,
இது இரண்டாவது தவறு எனவும் குறிப்பிட்ட வைகோ,இரு குற்றசாட்டுகளும் தவறில்லை என தேர்தல் ஆணையம் சொல்கின்றது எனவும், தலைமை தேர்தல் ஆணையம்  , மோடி எந்த தவறையும்  செய்யவில்லை என கூறுகின்றது அச்சத்தை ஏற்படுத்துகின்றது எனவும் தெரிவித்தார்.

சுதந்திரத்திற்கு பின்னர் இது வரை இருந்த பிரதமர்களில் , இப்போதைய பி்ரதமர் மோடி மட்டுமே தரம்தாழ்ந்து பேசுகின்ற பிரதமராக இருக்கின்றார் என கூறிய வைகோ, நான்காம் தர நபரை போல மோடி  பேசுகின்றார் எனவும் குற்றம்சாட்டினார்.புல்வாமா தாக்குதலில் இஸ்லாமிய சகோதரர்களும்  இரத்தம் சிந்தியிருக்கின்றனர் என கூறிய வைகோ, கல்புர்கி,பன்சாரே தபோல்கர், கௌரிலங்கேஷ் ஆகியோர் சிந்திய ரத்ததுளிகளினால் நான் ஓட்டு கேட்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

 உயர்மின்கோபுரம் விவசாய நிலங்களில்  கொண்டு வருகின்றனர் , கெயில் பைப் லைன் கொண்டு வருகின்றனர்,  நீர் ஆதாரங்களை இந்த ஆட்சியாளர்கள் அழிக்கின்றனர் என்று குற்றம்சாட்டிய அவர்,
இடைமலையாறு திட்டம் கேரளாவில் கட்டிமுடித்து விட்டாகிவிட்டது, ஆனால் தமிழகத்தில் ஆனைமலையாறு நல்லாறு திட்டம் இன்னமும் செயல்படுத்தபடவில்லை எனவும் தெரிவித்தார்.
மேதாட்டில் அணை கட்ட பா.ஜ.க அரசு பச்சைகொடி காட்டிவிட்டது எனவும்,
காவிரி மண்டலம் அழிந்து்விட்டது, 13 பேரை தூத்துகுடியில் எடப்பாடி அரசு சுட்டுக்கொன்றது என குற்றம்சாட்டிய வைகோ,
ஸ்டெர்லைட்காரனுக்கு மூன்று இடங்களில்  ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க அனுமதி கொடுத்து இருக்கின்றனர் எனவும் தெரிவித்தனர்.

தேர்தல் முடிவில் பா.ஜ.க 150 இடத்திற்கு மேல் வரமாட்டார்கள் என்று கூறிய அவர்,கஜா புயலில் தமிழகத்தில்  89 பேர் இறந்த்தற்கு மோடி எப்பொழுதாவது  அனுதாபம் தெரிவித்ததுண்டா?  எனவும் மோடிக்கு  தமிழகத்தில் ஓட்டு கேட்க தகுதியில்லை எனவும் தெரிவித்தார்.தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி கேட்கும் கமிசனை கண்டு பயந்து புதிய தொழிற்சாலைகள் வேறு மாநிலத்திற்கு ஓடுகின்றன எனவும் அவர் தெரிவித்தார்.

நீட் தேர்வு என்பது நாசகார தேர்வு என குறிப்பிட்ட அவர்,
இந்த தேர்வு எழுத சென்ற மாணவர்களை  மனிதாபிமானத்தோடு நடத்தவில்லை என தெரிவித்த வைகோ,
ராத்திரி, பகலாக படித்து மாணவர்கள் பதட்டத்தில் தேர்விற்கு வரும் போது கடுமையான சோதனைகள் நடத்தப்படுகின்றது என தெரிவித்தார்.ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், குரூப் 1, குரூப் 2 போன்ற தேர்வு எழுத செல்பவர்களுக்கு,  நீட் தேர்வுக்கு செல்லும் மாணவர்களுக்கு நடத்தும் சோதனை போல சோதனை நடத்தப்படுகின்றதா? என கேள்வி எழுப்பிய அவர்,
கிழிந்த ஆடையுடன் மாணவர்கள் தேர்வு எழுத போகும் போது மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும் எனவும் தெரிவித்தார்ர. அடிப்படை அறிவு, மனிதாபிமானம் இல்லாமல் நீட் தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் சோதிக்கப்படுகின்றனர் என கூறிய அவர் மத்திய அரசுக்கு ஆதரவு அளித்த அதிமுக, நீட் தேர்வை ரத்து செய்யாமல் தமிழகத்தில்  நுழையாதீர்கள் என சொல்லும் நெஞ்சுரம் ஏன் இல்லை எனவும் கேள்வி எழுப்பினார்.

திருப்பரங்குன்றம் தொகுதியில் இதற்கு முன்  நடந்த இடைதேர்தலில் ஜெயல்லிதா கைரேகை வைக்கப்பட்டதில் மோசடி நடந்த்து எனவும்,
பரப்பன ஆக்ரஹார சிறையில் இருக்கும் ஜெயல்லிதாவின்  கைரேகைகளையும்,  ஆவணத்தில் இருக்கும் கைரேகைகளை ஓப்பீடு செய்து பாரக்கவேண்டும் என திமுகவை சேர்ந்த சரவணக்குமார் வழக்கு தொடுததார் எனவும்,
ஆனால் ஜெ கைரேகையினையும் ஆவணத்தில் இருக்கும் கைரேகைகளையும்  ஓப்புகை பார்க்க கூடாது என எடப்பாடி அரசு உச்சநீதிமன்றத்தில் தடை வாங்கியது எனவும் தெரிவித்தார்.ரேகையை ஓப்பிட்டு பார்க்க கூடாது என சுப்ரீம்கோர்ட்டில் தடை வாங்கிய போதே பூனை குட்டி வெளியில் வநது விட்டது என உயர்நீதிமன்ற நீதிபதி தீர்ப்பில் எழுதுகின்றார் என கூறிய வைகோ தீர்ப்பின் முக்கிய பகுதிகளை படித்து காட்டினார்.எடப்பாடி அரசு நீடிப்பது தமிழ்நாட்டிற்கு கேவலம் என கூறிய அவர்,
தஞ்சை பிரதேசத்தை பட்டினி பகுதியாக்க ஆட்சியாளர்கள் முடிவு செய்துவிட்டனர் எனவும் நஞ்சை நிலங்களில் 10 ஆயிரம் அடிக்கு தோண்டி எரிவாயு எடுப்பார்கள் எனவும் அதனால் இந்தியா பொருளாதாரம் உச்சத்திற்கு செல்லும் எனவும் ஆனால்  மக்கள் எல்லாம்  அழிந்து போவோம் எனவும் தெரிவித்தார்.பொள்ளாச்சியில் 300 பெண்கள் பாலியல் குற்றங்களினால்  நாசமாகிவிட்டார்கள் என கூறிய அவர், குற்றவாளிகளுக்கு அரணாக இந்த அரசு இருக்கின்றது எனவும் தெரிவித்தார். 

மேலும் மக்களின் ஏழ்மையை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான பச்சிளம்  குழந்தைகள் கடத்தி , ஏமாற்றி விற்கப்படுகின்றன. இதைவிட கேவலம் தமிழகத்திற்கு உண்டா? என கேள்வி எழுப்பிய அவர் 67 ஆண்டுகளுக்கு முன்பு பராசக்தி வசனத்தில் கலைஞர் குழந்தைகளை வறுமையில் விற்பதை வசனமாக எழுதியிருப்பார். அது இப்போது தமிழகத்தில் நடந்து கொண்டு இருக்கின்றது எனவும் வைகோ தெரிவித்தார்.

Video in reporter app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.