தற்போது நடந்து முடிந்த பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் பெரும்பாலானோர் பொறியியல் படிப்புகளை தேர்வு செய்வதை விட்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகளில் சேர அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் கூட்டம் அலை மோதுகிறது.
இதுகுறித்து கோவை அரசு கல்லூரி முதல்வர் சித்ரா கூறுகையில், 1049 இளங்கலை பாடப் பிரிவு இடங்களுக்கு கடந்த 22ஆம் தேதி முதல் விண்ணப்பம் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதற்காக 18 ஆயிரம் விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு உள்ளது. இதில் இதுவரை 12 ஆயிரத்து 300 விண்ணப்பங்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.