ETV Bharat / state

நீச்சல் குளத்தில் மூழ்கி மாணவன் உட்பட இருவர் உயிரிழப்பு!

கோவை: நீச்சல் குளத்தில் மூழ்கி  மாணவனும், காப்பாற்ற சென்ற காவலாளியும் உயிரிழந்த சம்பவம், பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீச்சல் குளத்தில் மூழ்கிய  மாணவன்
author img

By

Published : Mar 25, 2019, 11:08 PM IST

கோவை, மருதமலை அடிவாரத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்திற்கு, வடவள்ளி பகுதியை சேர்ந்த 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து பேர் சென்றனர்.

இந்த குளத்தில் 7 அடி அழமுள்ள பகுதிக்கு தவறுதலாக சென்றபோது அன்புச்செல்வன் என்ற மாணவன் நீரில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரியாத மற்ற மாணவர்கள் பதற்றத்தில் மாணவனை காப்பாற்றும்படி சத்தம் எழுப்பி உள்ளனர்.

அங்கே காவல் பணியில் இருந்த தேவராஜ் (60) மாணவனை மீட்க தண்ணீரில் குதித்து உள்ளார். இதில் இருவரும் நீச்சல் குளம் ஆழமாக பகுதிக்கு சென்று, தண்ணீரில் மூழ்கி இறந்தனர். இது குறித்துவடவள்ளி காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இருவரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

முறையாக நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாததும், முதலுதவிக்கு எந்த உபகரணமும் இல்லாததே, இருவரின் உயிரிழப்புக்கு காரணம் என்று பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சு.சீனிவாசன்.       கோவை 

நீச்சல் குளத்தில் மூழ்கிய  மாணவனை  காப்பாற்ற சென்ற காவலாளி இருவரும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மருதமலை அடிவராம் தனியாருக்கு சொந்தமான நீச்சல் குளத்தில் குளிப்பதற்காக வடவள்ளி பகுதியில் பயின்று வரும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஐந்து நபர் இன்று காலை 11 மணியளவில் டிக்கெட் எடுத்துக் கொண்டு குளித்தனர. இந்த குளத்தில் 7 அடி அழமுள்ள பகுதிக்கு தவறுதலாக சென்றபோது அன்புச்செல்வன் என்ற மாணவன் நீரில் மூழ்கி தத்தளித்து உள்ளார்.  நீச்சல் தெரியாத மற்ற மாணவர்கள் பதற்றத்தில் மாணவனை காப்பாற்றும.படி சத்தம் எழுப்பி உள்ளனர். அங்கே காவல் பணியில் இருந்த தேவராஜ் (60) மாணவனை மீட்க தண்ணீரில் குதித்து  உள்ளார். இதில் இருவரும் நீச்சல் குளம் ஆழமாக இருந்ததால் காப்பாற்ற முடியாமல் இருவரும் தண்ணீரில் மூழ்கி இறந்து விட்டனர். உடனடியாக வட்வள்ளி காவல்துறைக்கு தகவல் தரப்பட்டு அங்கு விரைந்து  வந்த போலீசார் இருவரின் பிரேதத்தை  காப்பற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  முறையாக நீச்சல் பயிற்சியாளர்கள் இல்லாததும், முதலுதவிக்கு எந்த உபகரணமும் இல்லை என்று இந்த நீச்சல் குளத்தில் பயி்ற்சிக்கு வருபவர்கள் புகார கூறுகின்றனர்.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.