கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த இரு மாதங்களாக அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது. இதனால் கடந்த அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் கடைகள் எதுவும் திறக்கப்படவில்லை. இதற்கு இந்த வாரம் முதல் தளர்வை அறிவித்து முதலமைச்சர் உத்தரவிட்டார்.
அதனைத்தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கோவையில் கடைகள் அதிகமாக காணப்படும் டவுன் ஹால் ஒப்பணக்கார வீதி, டி.கே. மார்க்கெட் ஆகிய பகுதிகளில் கடைகள் திறக்கப்பட்டும் பொதுமக்கள் அதிகமாக காணப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் கடைகள் திறந்திருந்தும் வியாபாரம் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது என்று வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர்.