ETV Bharat / state

’திமுகவிற்காக பாடுபட்டவர்களை வேட்பாளராக நிறுத்தாதது வருத்தமளிக்கிறது’ - எஸ்.பி.வேலுமணி - SP Velumani Latest

கோயம்புத்தூர்: திமுகவிற்காக பாடுபட்ட இந்த மாவட்டத்தைச் சேர்ந்தவர்களை வேட்பாளராக நிறுத்தாமல், வேறு மாவட்டத்தைச் சேர்ந்தவரை நிறுத்தியது வருத்தமளிக்கிறது என்று அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  எஸ்.பி.வேலுமணி  எஸ்.பி.வேலுமணி தேர்தல் பரப்புரை  எஸ்.பி.வேலுமணி லேட்டஸ்ட்  Minister S.P.Velumani  S.P.Velumani Election Campaign  SP Velumani Latest  S.P.Velumani Election Campaign in Coimbatore
S.P.Velumani Election Campaign in Coimbatore
author img

By

Published : Mar 24, 2021, 1:00 PM IST

கோயம்புத்தூர் மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராகப் போட்டியிடும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, செல்வபுரம் பகுதியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ”கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற எம்.பி (பி.ஆர்.நடராஜன்) மக்களை சந்திக்கக்கூட வரவில்லை.

மக்களுக்கு நன்மைகள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. ஆனால், கரோனா காலத்தில் ஆறுதல் கூறுவதற்குகூட அவர் வரவில்லை என்பதுதான் வருத்தமளிக்கிறது. அதிமுக அனைவருக்கும் கட்சி வேறுபாடு பாராமல் பல நன்மைகளை செய்துள்ளது. இந்தத் தேர்தலில் இந்தத் தொகுதியைச் சேர்ந்த திமுகவிற்காக பாடுபட்ட ஒருவரையாவது போட்டியிட செய்திருக்கலாம்.

பரப்புரையில் பேசும் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

அல்லது இந்த மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரையாவது வேட்பாளராக நிறுத்தி இருக்கலாம். அதைவிடுத்து காங்கேயத்தில் ரவுடியாக இருந்த ஒருவரை கொண்டு வந்து நிறுத்தியுள்ளார்கள்” என்றார்.

இதையும் படிங்க: அப்துல் கலாம் சகோதரர் மறைவு, எஸ். பி. வேலுமணி, டிடிவி தினகரன் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.