ETV Bharat / state

‘திமுக ஆட்சியில் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்’ - எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு! - திமுகவை விமர்சித்த எஸ்பி வேலுமணி

தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் நடைபெறாமல் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என பொதுமக்கள் கூறுகிறார்கள் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Jun 29, 2023, 10:27 PM IST

திமுகவை விமர்சித்த எஸ்பி வேலுமணி

கோயம்புத்தூர் நேரு உள்விளையாட்டு அரங்கம் அருகில் உள்ள மைதானத்தில், பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப், சிற்றுளி அறக்கட்டளை, மார்ட்டின் குழுமம் சார்பில் மாநில அளவிலான கூடைப்பந்து போட்டிகள் மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி கூடைப்பந்து போட்டிகள் கோவையில் நடைபெறுகிறது. இன்று (ஜூன் 29) முதல் ஜூலை 2ஆம் தேதி வரை இப்போட்டிகள் நடைபெற உள்ளது. இதனை முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்து விளையாட்டு வீரர்களை சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த எஸ்.பி. வேலுமணி, “கோயம்புத்தூர் மாவட்டத்தில் பாரத் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் சிற்றுளி அறக்கட்டளை சார்பாக இந்தியாவிலேயே முதன்முறையாக மாநில அளவில் கூடைபந்து போட்டி உட்பட சக்கர நாற்காலி போட்டிகள் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் பல்வேறு வளர்ச்சிகளை முன்னாள் முதலமைச்சர்கள் ஜெயலலிதா மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் 50 ஆண்டுகள் இல்லாத வளர்ச்சியை தந்தனர். நேரு ஸ்டேடியத்திற்கும் புதுப்பிப்பதற்கு நிதி ஒதுக்கப்பட்டு மின்விளக்குகள் எல்லாம் மாற்றி புதுப்பிக்கப்பட்டது.

அதேபோல் உள் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கும் நிதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் தற்போது அதனை நிறுத்தி செம்மொழிப் பூங்கா அமைக்க உள்ளார்கள். விளையாட்டைப் பொறுத்தவரை அதிமுக ஆட்சியில் அதிக நிதிகள் ஒதுக்கப்பட்டு வீரர் வீராங்கனைகள் ஊக்குவிக்கப்பட்டனர். இந்த ஆட்சியைப் பொறுத்தவரை வாழ்த்து சொல்ல எதுவும் இல்லை, அதற்கான வாய்ப்பும் கிடையாது. எந்த திட்டமும் வரவில்லை, கடந்த இரண்டு ஆண்டு காலமாக ஒரு சாலை கூட போடப்படவில்லை. அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மூன்றாம் கூட்டு குடிநீர் திட்டம் முடிவு பெறவில்லை.

சிறுவாணி ஆற்றில் அணை கட்டுவதையும் தடுத்து நிறுத்தவில்லை. தற்பொழுது தமிழ்நாட்டில் குடும்ப ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஒட்டு மொத்த தமிழ்நாடு மக்களும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வந்தால் தான் விடிவு காலம் பிறக்கும் என்று கூறுகிறார்கள். அந்த நாளை தான் நாங்களும் எதிர்நோக்கி இருக்கிறோம். தமிழ்நாட்டில் உள்விளையாட்டு அரங்கம் மட்டுமின்றி மாநகராட்சி பூங்காக்கள், அம்மா பூங்காக்கள் உட்பட எதுவும் பராமரிக்கப்படவில்லை.

இதுகுறித்து அதிகாரிகளையும் கேட்க முடியவில்லை, கவுன்சிலர்கள் அமைச்சர்கள் என யாரையும் கேட்க முடியவில்லை. அதுமட்டுமின்றி கட்டுமான பொருட்கள் விலை உயர்வு, மின்சார கட்டண உயர்வு போன்றவற்றால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள், தமிழ்நாட்டில் எந்த திட்டங்களும் நடைபெறாமல் பொதுமக்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர்” என தெரிவித்தார். இந்நிகழ்வில் கோவை வடக்கு சட்டப்பேரவை உறுப்பினர் அம்மன் அர்சுனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: திராவிட மாடல் ஆட்சியையும் ஆன்மிகத்தையும் பிரிக்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.