ETV Bharat / state

கோவையில் அதிமுக பேனர் வைக்க மறுப்பு.. போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட எஸ்.பி.வேலுமணி! - கிறிஸ்தவ கூட்டமைப்பு

SP Velumani: கோவையில் நடைபெறும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வரவுள்ள எடப்பாடி பழனிசாமியின் பேனர்களை வைக்க போலீசார் மறுப்பு தெரிவித்தால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 28, 2023, 10:22 AM IST

போலீசாருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி!

கோயம்புத்தூர்: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கிறிஸ்தவ கூட்டமைப்பின் சார்பில், இன்று (நவ.28) மாலை கருமத்தம்பட்டியில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. கிறிஸ்துமஸ் விழா, விருது வழங்கும் விழா உள்ளிட்ட முப்பெரும் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்க உள்ளார்.

இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியை வரவேற்பதற்காக அதிமுக சார்பில் சாலையின் இரு புறங்களிலும் கொடிகள், பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில், கருமத்தம்பட்டி நான்கு ரோட்டில் பிளக்ஸ் பேனர்கள் வைக்க கிறிஸ்தவ அமைப்பினர் முயன்ற பொழுது, காவல் துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.

அப்போது பொது இடங்களில் உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர்கள் வைக்கக் கூடாது என காவல் துறையினர் தெரிவித்த நிலையில், கிறிஸ்தவ அமைப்பினரும், அதிமுகவினரும் கருமத்தம்பட்டி காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அங்கு வந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் சூலூர் எம்எல்ஏ கந்தசாமி ஆகியோரும் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கிறிஸ்தவ அமைப்பினர் எடப்பாடி பழனிசாமியை அழைத்து இருப்பதால் பிளக்ஸ் வைக்க அனுமதி மறுக்கின்றீர்களா எனக் கூறி, வேலுமணி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்பொழுது ‘சட்டத்துக்கு கட்டுப்பட்டு நிற்கிறோம், இல்லையென்றால் சாலையை மறித்து போராடுவோம்’ என தெரிவித்த எஸ்.பி.வேலுமணி, உயர் அதிகாரிகளை என்னால் இங்கு வர வைக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், “அதிமுகவினருக்கு மட்டும் அனுமதி மறுப்பீர்கள், திமுகவிற்கு மட்டும் எப்படி அனுமதி கொடுப்பீர்கள்” என தெரிவித்த அவர், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிகே போலீசார் உரிய பாதுகாப்பு வழங்குவதில்லை எனவும், கிறிஸ்துவ அமைப்பினர் பொதுவானவர்கள், கிறிஸ்துவ அமைப்புக்களை அவமதிக்கின்ற மாதிரி காவல்துறை செயல்பாடு உள்ளது எனவும் எஸ்.பி.வேலுமணி குற்றம் சாட்டினார்.

இது குறித்து கிறிஸ்துவ கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மேசாத் ராஜ் செய்தியாளர்களிடம் பேசும்போது, “கிருத்துவ மாநாட்டுக்கு பேனர் வைக்க போலீசார் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பாரதிய ஜனதா கட்சி நிகழ்வுகளின்போது பேனர் வைக்க அனுமதித்த போலீசார், சிறுபான்மை சமூகத்தினரின் நிகழ்வுக்கு பேனர் வைக்க திட்டமிட்டு அனுமதி மறுக்கின்றனர்.

திமுக அரசு சமூக நீதி பேசுவதாக கூறிக் கொண்டு, சிறுபான்மை மக்களுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருகிறது. எதிர்கட்சித் தலைவர் என்ற முறையில் எங்களது கோரிக்கைகளை தெரிவிக்க, எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநாட்டில் பங்கேற்க அழைப்பு விடுத்திருந்தோம். அதை தற்போது அரசியலாக்க முயற்சித்து வருகின்றனர்” என தெரிவித்தார். இரவு நேரத்தில் நடுரோட்டில் அதிமுகவினரும், கிறிஸ்தவ அமைப்பினரும் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.

இதையும் படிங்க: பிரபாகரின் மகள் என வெளியான வீடியோ குறித்து பழ.நெடுமாறன் கூறியது என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.