ETV Bharat / state

சூலூரில் பதற்றமான இடங்களில் துணை ராணுவம் குவிப்பு: தேர்தல் அலுவலர் - துணை ராணுவப் படையினர்

கோவை: சூலூர் சட்டப்பேரவைத் தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 32 பதற்றமான இடங்களில் துணை ராணுவப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

collector
author img

By

Published : May 19, 2019, 11:30 AM IST

சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரை நேற்று முன்தினம் மாலையுடன் நிறைவடைந்தது. சூலூர் சட்டப்பேரவை தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகளின் வேட்பாளர்கள் உட்பட 22 பேர் வேட்பாளர்களார் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், இன்று (மே 19ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான தள்ளுவண்டிகள், வாக்குச்சாவடிகளுக்கு தனித்தனியாக வழங்கப்படுகிறது.

சூலூர் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்த கோவை மாவட்ட தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த போது, சூலூர் தொகுதியில் 324 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் பணிக்கென ஆயிரத்து 800 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும், சூலூர் தொகுதியில் கண்டறியப்பட்டுள்ள 32 பதற்றமான இடங்களில் துணை ராணுவப் படையை சேர்ந்த 212 பேர் உட்பட, 3 ஆயிரத்து 23 காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

சு.சீனிவாசன்.      கோவை

சூலூர் தொகுதியில் பதட்டமான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள
32 இடங்களில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என
தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

கோவை மாவட்டம் சூலூர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது. சூலூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் வட்டாச்சியர் அலுவலகத்தில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்குப்பதிவுக்கு தேவையான 82 விதமான பொருட்களை அனுப்பும் பணி, சூலூர் தொகுதி தேர்தல் பார்வையாளர் அருண்குமார் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது. சூலூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 324 வாக்குச்சாவடிகளுக்கும்  வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பப்பட்டு வருகிறது. வாக்களிக்க வரும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான தள்ளுவண்டியிலும் வாக்குச் சாவடிகளுக்கு தனித்தனியாக வழங்கப்படுகிறது. சூலூர் சட்டமன்ற தொகுதியை பொறுத்தவரை திமுக, அதிமுக, அமமுக, மக்கள் நீதி மையம், நாம் தமிழர் ஆகிய முக்கிய கட்சிகள் வேட்பாளர்கள்  உட்பட 22 பேர் வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்.

சூலூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் பணிகள் குறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்போது 
சூலூர் தொகுதியில் 324 வாக்குப்பதிவு மையங்களில் தேர்தல் பணிக்கு என 1800 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் , இன்று மாலைக்குள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும்  வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்கள் அனுப்பப்படும் என தெரிவித்தார். சூலூர் தொகுதியில் பதட்டமான இடங்கள் என கண்டறியப்பட்டுள்ள
32 இடங்களில் துணை ராணுவம் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
துணை ராணுவம்  வீர்ர்கள் 212 பேர் உட்பட  தேர்தல் பாதுகாப்பு பணியில் 3423 காவல்துறையினர்  ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனவும் அனைத்து பணிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார். மேலும் தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள்  102  பேருக்கும் 76 முன்னாள் இராணுவத்தினருக்கும் தபால் வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளது எனவும் , அரசு ஊழியர்கள் 102 பேருக்கு அனுப்பபட்டுள்ள தபால்வாக்குகளில் , 
 14 வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வந்துள்ளன எனவும் தேர்தல் நடத்தும் அலுவலர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்..

Video in ftp
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.