ETV Bharat / state

'வேலைக்குப் போடா'ன்னு சொன்ன தாயை கொன்ற மகன்! - கொலை

கோவை: வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போக வேண்டியதுதானே என்று வலியுறுத்திய தாயை கொலை செய்த மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

தாயை கொன்ற மகன் கைது
author img

By

Published : May 26, 2019, 11:49 AM IST

பொள்ளாச்சி அருகே ஊஞ்சவேலாம்பட்டி செல்வ கணபதி நகரைச் சேர்ந்தவர் செல்லம்மாள். இவரது கணவர் பெருமாள்சாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், மகன் மௌனகுருசாமி, தாயார் செல்லம்மாள் ஆகியோர் வசித்துவந்தனர். இந்நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை தாயார் செல்லம்மாள் மௌனகுரு சாமியிடம், படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போக வேண்டியதுதானே என வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த மௌனகுரு தாயை சுவரின் மீது தள்ளிவிட்டு சென்றுவிட்டார். பின்னர், இரவு 8 மணியளவில் வீடு திரும்பியபோது செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார்.

இது குறித்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பேரில், அங்கு விரைந்துவந்த காவல் துறையினர் செல்லம்மாள் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

பின்னர், மௌனகுருசாமியை கைது செய்து விசாரித்ததில், தாயை ஆத்திரத்தில் தான் தள்ளிவிட்டுச் சென்று விட்டதாக மெளன குரு வாக்குமூலம் கொடுத்துள்ளார் என கூறப்படுகிறது.

பெற்ற தாயை தள்ளிவிட்டு மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ளஊஞ்ச வேலாம்பட்டியில் தாயை தள்ளி விட்டு கொலை செய்த மகன் கைது.
பொள்ளாச்சி- 26 பொள்ளாச்சி அருகேஊஞ்ச வேலாம்பட்டி செல்வகணபதி நகரை சேர்ந்தவர் செல்லம்மாள் கணவர் பெருமாள்சாமி சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார் இவர்களது மகன் மௌனகுருசாமி பிஎஸ்சி பட்டதாரி செல்லம்மாள் மகன் மௌனகுருசாமி இருவரும் வீட்டில் வசித்து வருகின்றனர் இந்நிலையில் இன்று காலை தாயார் செல்லம்மாள் மௌனகுரு சாமியிடம் படித்துவிட்டு வீட்டிலேயே இருப்பதற்கு பதிலாக ஏதாவது வேலைக்கு போக வேண்டும்  என்று அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது  இதனால் ஆத்திரமடைந்த மௌனகுரு தாயை சுவற்றின் மீது தள்ளிவிட்டு சென்றுவிட்டார் பின்னர் இரவு 8 மணியளவில் வீடு திரும்பிய போது செல்லம்மாள் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்துள்ளார் இச்  சம்பவம் அக்கம் பக்கம் உள்ளவர்களுக்கு  தகவல் தெரிந்ததால் அவர்கள்  காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர் இதனை அடுத்து அங்கு விரைந்த கிழக்கு காவல் நிலைய போலீசார் செல்லம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் பின்னர் மௌனகுரு சாமி கைது செய்து விசாரித்து வருகின்றனர் பெற்ற தாயை தள்ளிவிட்டு மகன் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது தாயை ஆத்திரத்திரத்தில் தான் தள்ளி விட்டு சென்று விட்டதாக மெளன குரு காவல்துறையினரிடம் வாக்கு மூலம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது .

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.