கோயம்புத்தூர்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று (ஜூன் 27) மக்கள் குறை தீர்ப்புக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உடல்நிலை குன்றிய நிலையில் ஒருவர் நீண்ட நேரமாக அமர்ந்திருந்த நிலையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள் அவரிடம் விசாரித்ததில் தான் சாணி பவுடர் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த காவலர்கள் அவரை உடனடியாக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தபின் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் இருகூர் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணன் (40) என்பது தெரியவந்தது.
மேலும் அவர் கூறுகையில், 'தான் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கச்சென்ற பொழுது முறையாக புகார் குறித்து கேட்காமலும், விசாரிக்காமலும் தன்னை அலட்சியப்படுத்தியதால் தற்கொலை செய்து கொள்ள முயன்றதாக' கூறியுள்ளார்.
இதனையடுத்து புகாரை முறையாக விசாரிக்காமல் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் சண்முகம், மாநகர காவல் ஆணையர் உத்தரவின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: கழிவறைக்குச்சென்றவரிடம் பணம்பறிப்பு - சிறுவர்கள் உள்பட 3 பேர் கைது!